Monday, 28 September 2015

"நெய்த் தோசை”

ரிக்-யஜுஸ்-ஸாம வேதங்கள் மூன்றும் பயிலுவிக்கும் காஞ்சி ஸ்ரீமடத்துப் பாடசாலையிலிருந்து ஒரு நாள் பசங்கள் வந்து ஸ்ரீசரணர்களின் திருமுன்னர் மாமறை ஒப்பித்தனர்.
பெரிய வித்வத் ஸதஸ் நடந்து பெரும் வித்வான்கள் ஸம்பாவனைகள் பெற்றிருந்த சமயம். எதிர்காலத்திற்கு நமது ஸநாதன தர்மத்தின் ஆணிவேரான வேதத்தைக் காத்துத் தரப்போகும் இளம் வாரிசுகளையும் ஸம்பாவிக்க ஐயன் உளம் கொண்டிருந்தார் போலும்! சுவையான முறையில் அதைச் செய்தார்.
யஜுர் வேத வித்யார்த்தி கூறிய பஞ்சாதியில் ‘க்ருஷ்ணாஜினம்’ ( மான் தோல்) என்று வந்தது.
உடனே ஸ்ரீசரணர் அப்பிள்ளைக்கு மான் தோலாஸசனம் பரிசளிக்கச் செய்தார்!
ஸாமவேத வித்யார்த்தி ஸோமனைப் பற்றி வேதகானம் இசைத்தான்.
‘கொழந்தைக்கு நல்ல சோமன் (வேஷ்டி) கொண்டு வாங்கோ!” என்று பணியாளரிடம் கூறித் தருவித்து வழங்கினார் தர்மதாதா.
ரிக்வேத வித்யார்த்தி சொல்லிப் போன ஸுக்தத்தில் இது போல் மந்த்ர வார்த்தையைக் கொண்டே பரிசளிக்கக் கூடியதாக எதுவும் வரவில்லை. அவன் முடிக்கும் போது மட்டும் ஏதோ ஒரு வார்த்தை ‘நெய்த் தோசை” என்பதுபோல் ஒலித்தது.
அதுவே போதுமானதாகி விட்டது நம் வள்ளலுக்கு!
‘கொழந்தைகள் எல்லாருக்கும் இப்பவே நெய்த் தோசை வாத்துப் போடுங்கோ!” என்று அன்பாணை இட்டுவிட்டார்!

No comments:

Post a Comment