Tuesday, 29 September 2015

மஹாபெரியவா தரிசன அனுபவங்கள்

திருவையாறு நாதஸ்வர வித்வான் நாயனக்கார குருசாமி. காஞ்சிப் பெரியவர் மீது பக்தி கொண்டவர். அவரின் அருளால் நல்ல குடும்ப வாழ்வும் அமைந்தது. அவரது மனைவியும் கணவரைப் போல, பக்திசிரத்தை மிக்கவராக இருந்தார். வருஷம் ஒருமுறை காஞ்சிபுரம் சென்று பெரியவரைத் தரிசித்து விட்டு அரைமணிநேரம் நாதஸ்வர கீர்த்தனைகளை வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதைக் கேட்டு ரசிக்கும் பெரியவரும் பிரசாதமாக குங்குமம், பழங்கள், பூக்களை அளித்து மகிழ்வார். குருசாமிக்கு ஒரு பழக்கம் உண்டு. இரவு தூங்கச் செல்லும் முன் பெரியவர் படத்தின் முன் நின்று காலை முதல் இரவு வரை நடந்ததை எல்லாம் வாய்விட்டுச் சொல்லி விடுவார். அப்படி ஒப்பித்து விட்டால் தான் அவருக்கு நிம்மதி.
இப்படி வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்த நேரத்தில் குருசாமிக்கு வயது ஐம்பதைத் தொட்டது. விதி விளையாடத் தொடங்கியது. காலையில் எழுந்ததும் தொண்டையில் வலி உண்டாவதை உணர்ந்தார். நாதஸ்வரத்தை வாசிக்க முயன்றபோது, வலி கூடியதோடு நாதஸ்வரதின் சீவாளியில் ரத்தம் வந்திருப்பதைக் கண்டார். பயம் தொற்றிக் கொண்டது. குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். குருசாமிக்கு மனசு முழுவதும் காஞ்சிப்பெரியவர் நினைப்பு தான்.""சுவாமி! நான் பிள்ளைக்குட்டிக்காரன். எனக்கு ஏதாவது ஒண்ணு நடந்தா குடும்பமே நடுத்தெருவுக்கு வந்துடுமே! நீங்க தான் துணை!'' என்று சட்டைப்பையில் இருந்த பெரியவரின் படத்தை தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டார்.
மருத்துவப் பரிசோதனை நடந்தது. சந்தேகத்தின் அடிப்படையில், தொண்டை சதையில் சிறு துளியை சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்திற்கு பயாப்ஸி சோதனைக்காக அனுப்பி வைத்தனர். ரிப்போர்ட் வர 15 நாட்கள் காத்திருக்க நேர்ந்தது. நாயனக்காரர் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்தது. குருசாமி தஞ்சாவூர் சென்று ரிப்போர்ட் வாங்கும் நாளுக்காக காத்திருந்தார். முதல் நாள் இரவு தூக்கம் வராமல் பெரியவர் படத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். நீண்ட நேரம் தூக்கம் வரவில்லை. விடியற் காலையில் லேசாக கண் அயர்ந்தார். அவருக்குப் பக்கத்தில் யாரோ வருவது போலவும், கைகளால் தொண்டைப்பகுதியை தடவியது போலவும் தோன்றியது. திடுக்கிட்டு எழுந்தவர் கண்ணுக்கு யாரும் தெரியவில்லை. ஒன்றும் புரியாமல் மீண்டும் தூங்கி விட்டு எழுந்தார்.
திருவையாறில் இருந்து தஞ்சாவூருக்கு கிளம்பினார் குருசாமி. அவரிடம் டாக்டர், ""குருசாமி! நீங்கள் பயப்படும் மாதிரி தொண்டையில் புற்று ஏதுமில்லை. சாதாரண கட்டி தான். விரைவில் குணமாயிடும்'' என்று ரிப்போர்ட்டைக் கையில் கொடுத்தார்.
தன் மனைவியிடம்,""நான் நம்பின பெரியவா கைவிடலை. என்னைக் காப்பாத்திட்டார். நேத்து இரவு என் பக்கத்தில வந்தது பெரியவர் தான். இப்போது தான் உண்மை புரியுது,'' என்று சொல்லி கண் கலங்கினார். மனதார நினைத்தவருக்கும் மகாபெரியவர் அருள்புரிவார் என்பதை உண்மை தானே!

மனோரத முத்திரை மூர்த்தி

பக்தர்களின் நியாயமான ஆசையை நிறைவேற்றி வைப்பதில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளுக்கு நிகர் யாருமுண்டோ? ப்ரத்யக்ஷ பெரியவாளை சிம்மாசனத்தில் அமர்த்தி சுவாமி புறப்பாட்டிற்காக தேரில் அலங்கரிக்க வேண்டுமென அடிமை வெகுநாளாக அவா கொண்டிருந்தார். காமாட்சி அம்மன் கோவிலில் தத்ரூபமாக ஒரு படம் இருப்பதை பார்த்துவிட்டு அம்மாதிரியே எம்பெருமான் ப்ரத்யக்ஷ ரூபம் இருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார்.
ஜகத்துக்கெல்லாம் ராஜாவான வேதவேந்தனை மலர் சிம்மாசனத்தில் வீற்றிருப்பது போல ஒரு காட்சி கிடைத்தால் அதை அவ்வருட ஜெயந்தி பத்திரிகையில் அலங்கரிக்கலாமென்ற எண்ணம். இதற்கு சென்னையை சேர்ந்த ஆடிட்டர்களான சங்கரன், ராகவன், பாலாஜி ஆகியோர் உதவி செய்தனர்.
தானே வலிய வந்து பிரத்யேகமாக இதற்கு முன் யாருக்கும் கிட்டாத திவ்ய சாம்ராஜ்ய சக்கரவத்தியாக காட்சி அளிக்க தயாளன் விழைந்து விட்டார். ஒரு புஷ்ப சிம்மாசனத்தை தயார் செய்து கொண்டு போய் மீளா அடிமை சென்ற போது பிரான் ஏகாதசி உபவாசத்தோடு சயனித்திருந்தார். இருப்பினும், அந்த நியாயமான ஆசையை பூர்த்தி செய்ய ஒப்புக்கொண்டு இசைந்தது புண்ணிய மனம்.
புஷ்ப சிம்மாசனம், புஷ்ப பாதுகை, புஷ்ப கிரீடம், புஷ்ப தண்டம் இத்யாதிகளை ஏற்றிக்கொண்ட பிரான் அங்கு காட்சியருளினார். இதற்காக கொண்டு வரப்பட்ட போட்டோகிராபர் பல காட்சிகளை எடுத்தார். எல்லாம் வல்ல இறைவனும் பரம கருணாமூர்த்தியும் உலகில் நடக்கும் எல்லா விஷயங்களும் தெரிந்தவர் மட்டுமல்லாமல் அண்டசராசரங்களை அறிந்தவரான ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவா தன்னை நிழற்படம் எடுக்கும்போது இசைந்து அமர்ந்திருந்தது யார் செய்த பாக்கியம்.
அடிமைக்கு இந்த அறிய வாய்ப்பு புளகாங்கிதம் அடைய வைத்தது. பல நிழற் திரு உருவங்களில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாள் தனது வலது கரத்தை யார் எது கேட்டாலும் மனோரதங்கள் பூர்த்தி யாகும்படியான வகையில் அமைந்த காட்சி அற்புதமாக அமைந்து விட்டது.
அந்த சக்கரவர்த்தி மலர் சிம்மாசனத்தில், மலர் கீரிடம் அணிந்து, மலர் பாதுகையுடன் தன் திருக்கரத்தில் மகோன்னதமான மனோரத முத்திரையுடன் அந்த அருங்காட்சி பிரபல பத்திரிகைகளிலும் அச்சேறி புனித படுத்தியது.
அந்த திருவுருவம் தான் வருடம் தோறும் புஷ்ப ரதம் ஏறி காஞ்சியின் ராஜ வீதிகளில் ராஜ உலா வந்து கொண்டு இருக்கிறது.
PS: இது நிகழ்ந்தது வைகுண்ட எகாதசி அன்று... ஐயன் அமரும் பொழுது பிற்பகல் 3 மணி
ஹரி நாராயண துரித நிவாரண பரமானந்த சதாசிவ சங்கர

"காஞ்சி மகானும், இசைப் பேரரசியும்"

( 72 ராகங்களில் தொகுக்கப்பட்ட மகா வைத்தியநாத சிவனின் மேள ராகமாலிகைப் பாடலை, காஞ்சி மகா பெரியவரின் உத்தரவின் பேரில் எம்.எஸ். பாடினார்.)
இம்மாத மங்கையர் மலர்.
.
காஞ்சி மகா பெரியவர் மீது எம்.எஸ். வைத்திருந்த மதிப்பும், மரியாதையும், பக்தியும் அளவிடற்கரியது. 72 ராகங்களில் தொகுக்கப்பட்ட மகா வைத்தியநாத சிவனின் மேள ராகமாலிகைப் பாடலை, காஞ்சி மகா பெரியவரின் உத்தரவின் பேரில் எம்.எஸ். பாடினார். சற்றே பிசகினாலும் பொருளும், சொல்லும் மாறுபட்டுவிடும் பாடல் அது. அதை துல்லியமாக, பிசிறின்றி எம்.எஸ். பாடியதைக் கேட்ட காஞ்சிப் பெரியவர், "சூரிய-சந்திரர்கள் உள்ளவரை உன் புகழ் இருக்கும்' என்று அவரை மனமார வாழ்த்தினார்.
சென்னை கோட்டூர்புரத்திலிருந்து தன் வீட்டில் காஞ்சி மகா பெரியவர் மற்றும் புட்டபர்த்தி சாய் பாபாவின் பெரிய அளவு புகைப்படங்களை வைத்து வணங்கி வந்தார் எம்.எஸ். வெள்ளிக்கிழமைகளில் கல்யாணி பாடுவது நல்லது என்று ஒரு முறை மகா பெரியவர் சொன்னதையே வேதவாக்காகக் கொண்டு தவறாமல் அதைக் கடைப்பிடித்து வந்தார்.
சதாசிவமும், எம்.எஸ்.ஸும் காஞ்சி மகானை தரிசிக்க அடிக்கடி செல்வதுண்டு. அவரது சன்னிதானத்தில் அமர்ந்து பக்திப்பூர்வமாகப் பாடிவிட்டு வருவார். சிவராத்திரியில் விடிய விடிய அங்கேயே தங்கி பாடிவிட்டு பெரியவரை தரிசித்துவிட்டு வருவதை வழக்கமாக் கொண்டிருந்தார்.
காஞ்சி முனிவர் இயற்றிய "மைத்ரீம் பஜத' என்ற பாடலை ஐக்கிய நாடுகள் சபையில் 1966ம் ஆண்டு முதன்முதலாக பாடினார் எம்.எஸ். அதற்குப் பிறகு, தான் பாடிய ஓவ்வொரு கச்சேரியிலும் எம்.எஸ். இந்தப் பாடலை பாடாமல் இருந்ததில்லை.
அதே சபையில்தான் ராஜாஜி எம்.எஸ்.க்காக பிரத்யேகமாக எழுதிக்கொடுத்த "May the Lord Forgive' என்ற ஆங்கில பாடலையும் பாடினார். இப்பாடலுக்கு மேற்கத்திய இசை வல்லுநர் ஹேண்டல் மான்யூவல் மெட்டமைத்துக் கொடுத்து, எப்படிப் பாடவேண்டும் என்பதையும் எம்.எஸ்.ஸுக்கு சொல்லிக் கொடுத்தார்.

"காணாமல் போன அடையும்,தோசையும்"

ஏகாதசியன்று பெரியவா நிர்ஜல உபவாசம். ஆனால் தொண்டு செய்யும் சிஷ்யர்களார் அவ்வளவு கட்டுப்பாடாக இருக்க முடியுமா? "கொலை பட்டினியாக" இல்லாமல், பலகாரம் சாப்பிடுவார்கள் [முழு பட்டினியாக ஓரிரு சிஷ்யர்கள் இருப்பார்கள்]
ஸ்ரீ மடத்தில் பலகாரம் என்றால், அரிசி உப்புமாதான் [இது ரொம்ப பிரசித்தம்] இட்லி, தோசை, அடை,பூரி என்று எதுவும் செய்வது கிடையாது.
ஒரு ஏகாதசி, சிஷ்யர்களுக்கு அடை சாப்பிட வேண்டும் என்று தீராத ஆசை. தேவையான சாமான்களை சேகரித்து, மாவு அரைத்து தயாராக வைத்து விட்டார்கள். பிற்பகல் ஒரு மணி, அடுப்படியில் சுமார் 50 அடைகளை வார்த்து வைத்து விட்டார். எல்லாருக்கும் பசி. நாக்கை சப்பு கொட்டிக்கொண்டு அடை பலகாரத்துக்கு உட்கார்ந்தார்கள்.
ஒருவர் இலையை எடுத்து போட்டுக்கொண்டிருந்தபோது, உத்தரவு வந்தது..."பெரியவா எல்லாரையும் வர சொல்றா"
அடுத்த நிமிஷம் அத்தனை பெரும் பெரியவா எதிரில். "விஷ்ணு சஹஸ்ரநாமம் எல்லோரும் ரெண்டு தடவை சொல்லுங்கோ" ஒரு வழியாக சஹஸ்ரநாம பாராயணத்தை முடித்து கொண்டு, அடை த்யானத்துடன், சமையல்கட்டுக்கு ஓடினார்கள்.ஆனால் ......அந்தோ! பரிதாபம்!
ஒரு அடை கூட காணப்படவில்லை. "என்னடா ஆச்சு?"
"என்ன ஆச்சா? இன்னான் [பெயர் இல்லை] வந்து சாப்பிட்டானாம்! மீதியை ராத்ரிக்காக கட்டிண்டு போயிட்டானாம்!!!"
காட்டு இரைச்சல். ஆனால் என்ன செய்ய? அடை நடை பயணமாக எங்கேயோ போய்டுத்து
ஏகாதசியன்று நிஜமான உபவாசம் சிஷ்யர்களுக்கும்!
இன்னொருமுறை சின்ன கிராமத்தில் முகாம். ஏகாதசி. தோசை பலகாரத்துக்கு பக்காவாக ஏற்பாடு செய்திருந்தார்கள். மத்யான்னம், டூரிஸ்ட் பஸ்ஸில் பக்தர்கள் தரிசனத்துக்காக வந்தார்கள்.
பெரியவா, சமையல்கட்டில் சேவை செய்த வேதபுரியை கூப்பிட்டு, எல்லாருக்கும் பலகாரம் பண்ண சொன்னார். வேதபுரி வார்த்து வைத்திருந்த தோசைகளை போட்டு, பஸ் கும்பலை திருப்தி பண்ணி விட்டார். [தனியா உப்புமா செய்து போட வேண்டும் என்ற எண்ணமே அவருக்கு வரலியாம்!!]
பசியோடிருந்த பணியாளர்கள் காச்மூச்சென்று கத்தினார்கள். என்ன பலன்? தோசை வரப்போறதா என்ன? உஷ்ணத்தை தணிக்கவே எல்லாருக்கும் நிறைய மோர் கடைந்து குடுத்தார் வேதபுரி.........உப்பு போடாமல்!
ஏகாதசி உபவாசம், த்வாதசி பாரணை செய்தால் மகத்தான புண்ணியம்! சிஷ்யர்களுக்கும் அந்த புண்ணியம் கிடைத்தது!
தெய்வ சங்கல்பம்!.

ஒரு சாத்துக்குடி பழத்தை ஆசிர்வாதமாக வழங்கினார்.

சுமார் 60 வருஷங்களுக்கு முன்பு என்று எனது நினைவு. பரமாச்சாரியார் தஞ்சாவூர் ஜில்லாவில் திக்விஜயம் செய்து கொண்டிருந்த நேரம். மாயவரத்தில் பரமாச்சாரியாரின் பட்டணப் பிரவேசத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். பரமாச்சாரியாரின் பட்டணப் பிரவேசம் என்று சொன்னால் யானை, குதிரை எல்லாம் முன்னால் ஊர்வலமாக வரும். பரமாச்சாரியார் பல்லக்கில் வருவார்.
தருமபுரம் மடம் வழியாக பரமாச்சாரியாரின் பல்லக்கு வந்தது. அங்கே பூர்ணகும்ப மரியாதையுடன் தருமபுரம் ஆதீனத்துக்கு விஜயம் செய்தார் அவர். பண்டார சந்நிதி அவரை கெளரவம் செய்து மடத்திற்கு அழைத்துச் சென்றார். பிறகு மயிலாடுதுறைக்குள் நுழைந்தது பரமாச்சாரியாரின் பட்டணப் பிரவேச ஊர்வலம்.
நாகஸ்வர சக்ரவர்த்தி டி.என்.ராஜரத்தினம் பிள்ளை பெயரில் மட்டுமல்ல, நிஜமாகவே ஒரு ராஜாவைப் போல வாழ்ந்தவர். அவருடைய லெட்டர்பேடில் "அகில உலக நாகஸ்வர சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்கள்' என்றுதான் அச்சிடப்பட்டிருக்கும். கப்பல் போன்ற ஸ்டுடிபேக்கர் காரில்தான் பயணிப்பார். இந்த சந்தர்ப்பத்தில் வெளியூரில் கச்சேரி செய்துவிட்டு திருவாவடுதுறை திரும்பிக் கொண்டிருந்தார் டி.என்.ஆர்.
அந்த நாளில் மாயவரத்தில் பிரபலமான காளியாக்குடி ஹோட்டல் அருகில் உள்ள மணிக்கூண்டு வழியாக சென்று கொண்டிருந்த டி.என்.ஆர். கூட்டத்தைப் பார்த்துவிட்டு "என்ன விசேஷம்?' என்று வினவினார். பரமாச்சாரியாரின் பட்டணப் பிரவேசம் வந்து கொண்டிருக்கிறது என்றும் அடுத்த தெருவில் இருக்கிறது என்றும் கேள்விப்பட்டவுடன் வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தச் சொன்னார். சட்டையைக் கழற்றினார். அங்கவஸ்திரத்தை இடுப்பில் சுற்றிக் கட்டிக் கொண்டார். மணிக்கூண்டு அருகில் நின்று கொண்டு நாயனம் வாசிக்கத் தொடங்கிவிட்டார்.
இவரது நாயன சங்கீதம் காதில் விழுந்தவுடன், "ராஜரத்தினம் வாசிப்பு போலிருக்கிறதே, அங்கே போங்கோ' என்று பரமாச்சாரியார் உத்தரவிட்டு, பட்டணப் பிரவேச ஊர்வலத்துடன் பல்லக்கு மணிக்கூண்டை நோக்கி நகர்ந்தது. இதைத்தானே ராஜரத்தினம் பிள்ளை எதிர்பார்த்தார்! அவருக்கு பரம சந்தோஷம். உற்சாகம் தாங்கவில்லை. அடுத்த ஒன்றரை மணி நேரம் மணிக்கூண்டு அருகில் நின்றபடியே வாசித்துக் கொண்டிருந்தார் டி.என்.ஆர். மாயவரம் நகரமே அங்கே கூடிவிட்டது.
பரமாச்சாரியார் ராஜரத்தினம் பிள்ளையின் வாசிப்பை மெய்மறந்து கேட்டு ரசித்தார். அவருக்கு ஒரு சாத்துக்குடி பழத்தை ஆசிர்வாதமாக வழங்கினார். சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து விட்டு நாகஸ்வர சக்ரவர்த்தி சொன்னார்- "இந்த ஜென்மா சாபல்யம் அடைந்துவிட்டது!'

“நீங்க எல்லோரும் க்ஷேமமாக இருக்கணும்”

(அந்த கூட்டத்துக்குத் தெரியாது:காஞ்சிப்பெரியவர் தான் தமிழ் பண்பாடுதான் இந்துப்பண்பாடு என்பதைக் கண்டறிந்தார் என்று! தமிழினத்தின் ஆன்மீக அப்பா காஞ்சிப்பெரியவர் தான் என்பது தெரியாது)
இன்று அனுஷம் 19-09-2015
விழுப்புரத்தில் ஜய வருடம்,வைகாசி மாதம் 8 ஆம் நாள்,அனுஷம் நட்சத்திரத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சாஸ்திரி என்ற வேத விற்பன்னருக்கும்,ஸ்ரீமஹாலட்சுமி அம்மாளுக்கும் புதல்வனாக அவதரித்தவர் காஞ்சி பரமாச்சாரியார்.
இவர் காஞ்சி காமகோடி பீடாதிபதியாக பிலவங்க வருடம்,சித்திரை மாதம் 27 ஆம் நாள் பட்டாபிஷேகம் செய்யப்பட்டு,8.4.1994 அன்று முக்தியடைந்தார்.இன்றும் இந்துக்களாகிய நம் அனைவருக்கும் வழிகாட்டியாக இருக்கிறார்.
பெரியவர் ஒரு முறை சம்ஸ்க்ருத கல்லூரியிலிருந்து மயிலை கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தார்.லஸ் கார்னரில் இவருக்கு கருப்புக்கொடி காட்டி பழிப்பதற்கென்று நாத்திகக் கூட்டம் கூடியிருந்தது.
(அந்த கூட்டத்துக்குத் தெரியாது:காஞ்சிப்பெரியவர் தான் தமிழ் பண்பாடுதான் இந்துப்பண்பாடு என்பதைக் கண்டறிந்தார் என்று! தமிழினத்தின் ஆன்மீக அப்பா காஞ்சிப்பெரியவர் தான் என்பது தெரியாது)
பெரியவருக்கு எதிரே வந்து கறுப்புக்கொடியை உயர்த்தி, ‘ஒழிக,ஒழிக சங்கராச்சாரியார் ஒழிக’ என்று அக்கும்பல் கோஷமிட்டது.அதைக் கேட்டுக்கொண்டே வந்த பெரியவர் நகரவில்லை;அவர் ஓடிவிடுவாரென எதிர்பார்த்த கும்பல் கத்தி கத்தி களைத்து ஓய்ந்தது.அதற்கென்றே காத்திருந்தவர் போல,அவர்களை அருகில் வரச் சொன்னார்.கும்பலுக்கு உள்ளூர பயம் வந்துவிட்டது.
அவர் மகிமை அவர்களுக்கும் தெரியும்.ஆதலால் ஏதேனும் சபித்துவிடுவாரோ என்ற பயம்தான்.அதை தெரிந்துகொண்டு, “பயப்படாமல் அவர்களை வரச் சொல்லு” என்று மறுபடியும் சொன்னார்.எல்லோரும் அருகில் வந்தவுடன் இரு கைகளையும் தூக்கி,
“நீங்க எல்லோரும் க்ஷேமமாக இருக்கணும்”
என்று ஆசிர்வதித்தார்

"பொதுக் கார்யங்கள்ள ஈடுபடரப்போ, நாலு பேர் நாலு விதமா சொல்லத்தான் சொல்லுவா. அதையெல்லாம் லக்ஷியமே பண்ணப்டாது".

(எத்தனை சத்யமான உபதேசம்!)
மெட்ராஸ் ராணிப்பேட்டையை சேர்ந்த பக்தர்களிடம், காமாக்ஷிக்கு பாச, அங்குசம் பண்ணித் தரும்படி பெரியவா சொன்னார். எத்தனை நல்ல தெய்வீக பணியானாலும், "நிதி" என்று வரும்போதுதான் அதை திரட்டும் கஷ்டம் தெரியும்!
"காஞ்சிபுரம் காமாக்ஷிக்கு..ன்னா அந்த ஊர்லேயே வசூல் பண்ணிக்கலாமே! இங்க வந்து யாசகம் கேக்கணுமா என்ன?"
"அவனவன் சோத்துக்கு வழி இல்லாம திண்டாடிண்டு இருக்கான்.......அம்பாளுக்கு பாசமாம், அங்குசமாம்"
மக்கள் சேவையே மகேசன் சேவை...ஆஸ்பத்திரி, பள்ளிக் கூடம், அனாதை ஆஸ்ரமம், முதியோர் இல்லம்...ன்னு செலவுக்கு குடுத்தா, மக்களுக்கு அது பிரயோஜனப்படும். அதை விட்டுட்டு, அம்பாளுக்கு பாசம், அங்குசம் இல்லேன்னா ஏதும் நஷ்டமா என்ன?"
இன்னும் இதைவிட மஹா மோசமான வார்த்தைகளை கேட்க வேண்டியிருந்தது. ஆனாலும், ஒன்றே ஒன்றுதான் மஹா பலத்தையும் குடுத்துக் கொண்டிருந்தது...........அது," பெரியவாளுக்காக பண்ணுகிறோம்" என்ற சந்தோஷம்!
பெரியவாளுடைய சங்கல்பம் நடக்காமல் போகுமா?
பாசாங்குச கைங்கர்யம் நினைத்ததை விட மிகச் சிறப்பாக நடந்தது. அதை முக்கியமாக முன்னின்று நடத்திய ஒரு பக்தரிடம் பெரியவா சொன்னார்....
.."பணவசூலுக்காக ரொம்பபேர்கிட்ட போயிருப்பே...
.எல்லாரும் மனசார குடுத்திருப்பா...ன்னு சொல்ல முடியாது. சில பேர் ரொம்ப தாறுமாறாக் கூட பேசி ஒங்க மனஸை ரொம்ப புண்படுத்தியிருப்பா......"ஏண்டாப்பா இந்த வேலைய ஏத்துண்டோம்? பேசாம ஆயிரமோ, ரெண்டாயிரமோ யதா சக்தி குடுத்துட்டு ஒதுங்கிண்டிருக்கலாமோ?...ன்னு கூட தோணியிருக்கும்......
ஆனா, இந்த மாதிரியான பொதுக் கார்யங்கள்ள ஈடுபடரப்போ, நாலு பேர் நாலு விதமா சொல்லத்தான் சொல்லுவா. அதையெல்லாம் லக்ஷியமே பண்ணப்டாது. அம்பாளுக்கு பண்ற கைங்கர்யம்..ன்னு மனஸ்ல உறுதி இருக்கணும். இந்த எண்ணம் வந்துடுத்துன்னா....மனஸ் சமாதானம் ஆய்டும்"
எத்தனை சத்யமான உபதேசம்

"பெரியவா பண்ணின வேடிக்கையும் ஆச்சர்யமும்"

(காகத்தைப் போலவே, கா....கா.....என்று கத்தினார்கள்,பெரியவா)
அகண்டகாவேரிப் பகுதியில் பெரியவா
சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள்.
ஒரு நாள், முகாம் செய்திருந்த இடத்துக்கு
அருகிலிருந்த தென்னந்தோப்புக்குப் போனார்கள்.
தோப்பு மரங்களில் நூற்றுக்கணக்கான
காகங்கள் இருந்தன.
உடன் வந்திருந்த ஒரு பையனைப் பார்த்து,
"இந்தக் காக்கைகளையெல்லாம்
கத்தச் சொல்லட்டுமா?" என்றார்கள் பெரியவா.
பையனுக்கு என்ன பதில் சொல்வதென்று
புரியவில்லை.
"இதோ,பார்..."என்று சொல்லிவிட்டு,காகத்தைப்
போலவே, கா....கா.....என்று கத்தினார்கள்,பெரியவா.
எல்லாக் காகங்களும் கோரஸாக எதிரொலி கொடுத்தன.
பெரியவா சொன்னார்கள்; 'காகங்கள் கத்துகின்றன.
நிறைய விருந்தாளிகள் வருவார்கள் என்று சூசகம்.
நிறைய சாப்பாடு தயார் பண்ணச் சொல்லு...'
'நிறைய சமைத்தால், எல்லாம் வேஸ்டாகிப் போகும்.
சாப்பிடுவதற்கு மனிதர்கள் எங்கே?'
என்று சிஷ்யர்கள் சங்கடப்பட்டார்கள்.
பக்கத்து, ஏதோ ஊரில், காங்கிரஸ் கட்சியின் கூட்டமாம்.
அந்தக் கூட்டத்துக்கு வந்தவர்கள், பெரியவா அருகில்
இருப்பது தெரிந்ததும் தரிசனத்துக்கு வந்து விட்டார்கள்.
எல்லாரையும் சாப்பிட்டு விட்டுப் போகும்படி
பெரியவா பணித்தார்கள்.
கடைசியில், ஒரு பிடி சோறு மிஞ்சவில்லை!

"ஓ! சுவாமிநாதா! நீயா? உன் உத்தரவு எதுவானாலும் நாங்கள் நிறைவேற்றி வைக்கிறோம்"

ஒரு முறை மகா சுவாமிகள் தென் தமிழ் நாட்டில்
யாத்திரை செய்யும்போது இரவு நேரத்தில் அடுத்த
கிராமத்துக்குக் கால்நடைப் பயணமாகப் போக நேர்ந்தது.
அங்கே இரு பிரிவினரிடையே ஜாதிச்சண்டை நடந்து
கொண்டிருந்தது. அதனால் பக்தர்கள் போவதற்குப்
பயப்பட்டார்கள்.
"ஒன்றும் நடக்காது.போகலாம் வாருங்கள்" என்று
கிளம்பி விட்டார் சுவாமிகள். சீடர்கள் பயத்தினால்
நடுங்கியபடி தொடர்ந்து போனார்கள்.
அடுத்த கிராமத்துக்குள் நுழையும் இடத்தில் ஒரு
கூட்டம் அரிவாள்,குண்டாந்தடியுடன் அவர்களைத்
தாக்குவதற்காகக் காத்துக்கொண்டிருந்தது.
அந்தக் கூட்டத்தின் தலைவன் அவர்களை
அமர்த்திவிட்டு மகா சுவாமிகளை நோக்கி வந்தான்.
இரண்டு நிமிடங்கள் ஒரே அமைதி. யாருக்கும்
பயத்தால் வாய் திறந்து பேசக்கூடத் தைரியம்
வரவில்லை. மகா சுவாமிகள் ஒரு புன்னகையுடன்
அவனைப் பார்த்தார்.
"ஓ! சுவாமிநாதா! நீயா? உன் உத்தரவு எதுவானாலும்
நாங்கள் நிறைவேற்றி வைக்கிறோம்" என்று
அங்கேயே கீழே விழுந்து நமஸ்காரம் செய்தான் அவன்.
மற்ற எல்லோருக்கும் ஆச்சரியம்! கூட வந்த கலகக்
கூட்டம் குண்டாந்தடி,அரிவாள் எல்லாவற்றையும்
கீழே போட்டுவிட்டு அந்தந்த இடத்திலேயே
நமஸ்காரம் செய்து வணங்கி நின்றது.
மற்றவர்களிடம் மகா சுவாமிகள் அமைதியாக
"நானும் அவனும் பள்ளிக் கூடத்தில் ஒன்றாகப்
படித்தோம்" என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம். காரணம் அந்தத்
தலைவன் இஸ்லாமிய வகுப்பைச் சேர்ந்தவன்.
அவர்களுடைய இமாமை சந்திக்க விரும்பினார்
மகா பெரியவர்கள்.அவர் வந்ததும் குர் ஆனிலிருந்து
சில வரிகளை எடுத்துச் சொல்லி அன்பையும்
சகோதரத்துவத்தையும் இஸ்லாமிய மதம் எவ்வளவு
முக்கியமாகக் கருதுகிறது என்று விளக்கினார்.
அனைவரும் மகிழ்ந்து போனார்கள்.
அன்று கிராமத்தில் சுவாமிகளை ஊர்வலமாக
அழைத்துக் கொண்டு போனார்கள் கிராம மக்கள்.
அவர்களை அடுத்த கிராமத்துக்கு அழைத்துச் சென்று
விட்டு விட்டு, விடை பெற்றுத் திரும்பினார்கள்.

"பார்வையைக் கொடுத்த பரமேஸ்வரன்!"

காஞ்சி மகாப்பெரியவாளை தரிசிக்க கேரளாவில் இருந்து ஒரு பெண்மணி தன் கணவர் மற்றும் குழந்தையுடன் ஸ்ரீமடத்துக்கு வந்திருந்தார். இந்தப் பெண்மனிக்குப் பார்வை இல்லை. தன் கணவனின் உதவியுடன் தான் கொண்டு வந்திருந்த பழங்கள் போன்ற காணிக்கைப் பொருட்களை ஒரு மூங்கில் தட்டில் வைத்தார். பின்னர் அவர் மகாப்பெரியவா பார்வை படும்படியான இடத்தில் அமர்ந்தார்.
இந்த பெண்மணி தன் வயிற்றில் குழந்தையை சுமந்திருந்தபோது, வீட்டுக்குள் தடுக்கி விழுந்துவிட்டாள். இந்தச் சம்பவத்தில் இவரது கண்பார்வையும் பாதிக்கப்பட்டது. பிறந்த குழந்தையை பார்க்கக் கூட முடியவில்லை . தன் குடும்பத்துக்கு நெருக்கமான நம்பூதிரியிடம் கேட்டபோது , அவர், " தமிழ்நாட்டில் உள்ள கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்யுங்கள், "என்றார்.
எல்லா கோயில்களுக்கும் சென்றுவிட்டு, வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வந்த போது, அர்சகர் காஞ்சி ஸ்ரீமடத்துக்குப் போகச்சொன்னார். அதன்படி ஸ்ரீமடத்துக்கு வந்தனர்.
நம்பி வந்தவர்களை மகான் கைவிட்டதுண்டா? இந்தப் பெண்மணிக்குத் தன் இன்னருளைப் பொழிய தீர்மானித்துவிட்டார். மகாபெரியவா அருகிலிருந்த டார்ச்லைட்டைத் தன் கையில் எடுத்துக்கொண்டார். கேரளப் பெண்மணியின் கணவரை அழைத்து, "ஒங்க பார்யாளை என்னைப் பார்க்கச் சொல்லுங்கோ. நான் தெரியறேனான்னு கேளுங்கோ,"என்று சொல்லிக்கொண்டே, தன் முகத்தில் டார்ச் ஒளியைப் பாய்ச்சினார்.
இந்த வார்த்தைகளை காதில் வாங்கிய மறுகணம் பெண்மணியின் முகம் பிரகாசம் அடைந்தது. கைகள் இரண்டையும் கூப்பி மகாபெரியவாளைப் பார்த்து, "இதோ...மகாப்பெரியவா என் கண்களுக்குத் தெரியறேளே...வைத்தீஸ்வரன் கோயில் குருக்கள் உங்களைப் பத்தி என்ன அடையாளம் சொன்னாரோ, அதை என் கண்களால் தரிசிக்கிறேனே.." என்று சொன்னபடி அந்த மகானைப் பார்த்து கன்னத்தில் மாறி மாறி அறைந்துகொண்டாள். போதும், போதும் என்கிற வரை பெரியவாளை நமஸ்காரம் செய்தாள்.
ஆம்!அந்த கேரளப்பெண்மணிக்கு மகாபெரியவா திருச்சன்னிதியில் எப்போதோ பார்வை வந்துவிட்டது. பெரியவாளை நமஸ்காரம் செய்துவிட்டு, தன் குழந்தையை எடுத்துக் கொஞ்சினாள்
கூடியிருந்த அனைவரும் பெரியவா மகிமையை கண்களுக்கு நேராகப் பார்த்த ஆனந்தத்தில் திக்குமுக்காடிப் போனார்கள்.
அப்போது பெரியவா," என்கிட்ட ஒண்ணும் இல்லேம்மா. எல்லாம் உன்னோட பூர்வ ஜன்ம பலன். ஒன்னோட நம்பிக்கை வீண் போகலை. நான் தினமும் தியானம் பண்ற அம்பாள் கமாட்சியோட அருள் தான் இது," என்று அடக்கமாகச் சொன்னாராம்!
அந்த தம்பதியருக்கு பிரசாதம் கொடுத்து அனுப்பினார் பெரியவா. அதுதான் மகாப்பெரியவாளின் மகிமை!

எசமானும் தியாகராசாவும். ஒண்ணுதானே !

1984ம் வருஷம் ஸ்ரீபெரீவா காஞ்சிபுரத்தில் இருந்த சமயம்..
திருவாரூரிலிருந்து சுவாமியைத் தொட்டு பூஜிக்கும் உரிமை பெற்ற நயினார் வந்து கோவில் மரியாதைகளைச் சமர்ப்பித்தார்.
ப்ரஸாதத் தட்டில் ஸ்ரீதியாகராஜாவுக்குச் சார்த்திக் களைந்த செங்கழுநீர், நீலோத்பல புஷ்பங்கள் இருந்தன.
இவ்விரண்டும் மிகவும் அரிதானவை. திருவாரூர் தவிர வேறெங்கும் காணமுடியாதவை.
ஸ்ரீதியாகராஜாவுக்கு தினமும் இந்த புஷ்பங்களைச் சார்த்துவது வழக்கம்.
கோவில் ஐந்து வேலி, கமலாலயக் குளம் ஐந்து வேலி, செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி என்பது வழக்கு மொழி.
ப்ரஸாத தட்டைத் தன் கரத்தால் தொட்ட ஸ்ரீபெரீவா இரண்டு புஷ்பங்களையும் தன் சிரத்தில் சார்த்திக்கொண்டார்கள்...சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டு…திருவாரூரிலிருந்து செங்கழுநீர், நீலோத்பலக் கிழங்குகளை ஸ்ரீமடத்தில் பயிராக்கக் கொண்டு வரும்படி உத்தரவிட்டார்கள்.
ஊருக்குத் திரும்பினோம்..
செங்கழுநீர்ஓடைக்குப் போனோம். காவல்காரரைப் பார்த்து விஷயத்தைச் சொன்னோம்..
“திருவாரூரில் மட்டுமே வளரும் இந்த புஷ்பங்கள் வேறெங்கும் வளர்வதில்லை ; இருந்தாலும் எசமான் சொன்னா நடக்கும்.. அவங்களும் தியாகராசாவும் வேற இல்லீங்களே!” என்றபடியே கிழங்குகளைப் பறித்துக் கொடுத்ததார் காவல்காரர் சுந்தரமூர்த்தி..
உத்தரவானபடியே கொடிக்கிழங்குகளைக் ஸ்ரீமடத்திற்குக் கொண்டு வந்து ஸ்ரீபெரீவாளிடம் சமர்ப்பித்தோம்..
ஸ்ரீபெரீவாளின் சன்னதிக்கெதிர்புறமாக இருந்த மேடையின் வெளிப்புறம் நடைபாதையை ஒட்டி இரண்டு தொட்டிகளை கட்டச் சொன்னார்கள். ஆற்று மண், குளத்துப் பொருக்கு இரண்டும் கொண்டு நிரப்பச் சொன்னார்கள். கிழங்குகளை மண்ணுக்குள் புதைத்து ஜலம் விடச் சொன்னார்கள்.
எல்லாம் நல்லபடியாக நடந்தது…
ஆனாலும் தியாகராஜாவுக்கு மட்டுமே என்று சொந்தம் கொண்டாடப்பட்டு வரும் இவை ஸ்ரீமடத்தில் கட்டப்பட்ட தொட்டிகளில் பூக்குமா ? என்னும் கேள்வி எங்கள் மனத்தில் இருந்தது.
இரண்டு மாதங்களில் கொடிகள் நன்றாக வளர்ந்து மூன்று மூன்றாக ஆறு புஷ்பங்கள் ஒரே சமயத்தில் பூத்தன !
தொட்டிகளுக்கருகில் வந்து பார்த்த ஸ்ரீபெரீவா இரண்டை ஸ்ரீசந்த்ரமௌலீச்வரருக்கும், இரண்டை ஸ்ரீகாமாக்ஷீ அம்பாளுக்கும் சார்த்தும்படி உத்தரவிட்டார்கள்..மீதமிருந்த இரண்டையும் ஸ்ரீ தியாகராஜஸ்வாமிக்குச் சார்த்துவது போலத் தன் சிரசில் வைத்துக் கொண்டார்கள்..
மறுபடியும் பூக்கள் தொட்டியில் பூக்கவில்லை...
`
சில மாதங்களுக்கு முன் ஸ்ரீபெரீவாளுக்குச் சார்த்துவதற்காக மறுபடியும் செங்கழுநீர், நீலோத்பலம் பயிராக்கினால் என்ன என்று தோன்றியது.கிழங்குகளைத் திருவாரூரிலிருந்து கொண்டு வந்து சின்னத் தொட்டிகளில் இட்டு வளர்த்தோம்...
இரண்டு பூக்களுமே இந்தக் கட்டுரை எழுதும் இன்றைய தினத்தில் பூத்திருக்கின்றன. இரண்டையும் எஜமானுக்கு ஸ்ரீபாத புஷ்பங்களாக அட்டித்தொழுது நமஸ்கரிக்கிறோம்.
எசமானும் தியாகராசாவும் ஒண்ணுதானே !

"எந்த தீட்டாக இருந்தாலும் அந்த இடத்துல கோ பாத துளி பட்டுட்டா,அந்த இடம் பரிசுத்தமாயிடறது

(பெண்கள் காலேஜில் பெரியவா விஜயம்)
திருச்சிராப்பள்ளியில் மாமுனிவர் தங்கி இருந்த சமயம் சீதாலக்ஷ்மி ராமஸ்வாமி கல்லூரியின் தலைவர் மஹானிடம் வந்து தங்கள் கல்லூரியில் பெரியவரின் பொற்பாதம் பட வேண்டும்,குழந்தைகளுக்கு ஆசி வழங்கவேண்டும் என்று விண்ணப்பித்தார்.
மோன குரு பதில் ஏதும் சொல்லவில்லை.அவரும் தொடர்ந்து விண்ணப்பித்தவாறே இருந்தார். ஒரு நாள் அவரிடம் "நாளை காலை உன்காலேஜிக்கு வரேன்.நீயும் உன்மனைவியும் ஒரு பசுமாடு கன்றுக்குட்டியோடு காத்திருங்கோ" என்றார்.
பக்தருக்கு அளவிலா மகிழ்ச்சி.அப்படியே தயாராகஇருக்க மஹானும் வந்தார்.பூர்ணகும்ப வரவேற்பை அங்கீகரித்தார்
.
பக்தரிடம் "என் பாதம் எங்கெல்லாம் படணும்னு உனக்கு ஆசையோ அங்கெல்லாம் பசுமாடு கன்றுக்குட்டியை பிடிச்சுண்டு நீ முன்னாலே போ பின்னாலேயே நான் வரேன்" என்றார்.
அப்படியே எல்லா இடமும் சென்று வந்தபின் வெளியே
வந்து திருப்தியா உனக்கு என்று கேட்க அவர் என்ன பதில் சொல்வார்.கண்கள் கடலாக, மனம் உருகி கருணைக்கு நன்றி தெரிவிப்பதற்காக சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார். ஶ்ரீமடம் திரும்பிய மஹான் மாலை அடியார்களிடம் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது காலையில் காலேஜ்க்கு போன பேச்சு வர,ஒருவர் பெரியவா ஏன் காலேஜ்ல பசு மாட்டு பின்னாலேயே போனார் என்று கேட்டார்.
சிரித்தமஹான் அவன் எங்கிட்ட ரொம்ப பக்தியாயிருக்கான் நான் வந்தா அவன் காலேஜ் ச்ரேயஸ்னு நினைச்சு கூப்பிட்டான்,ஆனால் அந்த காலேஜ் ஸ்தீரிகள் படிக்கும் காலேஜ்.அவா எல்லா நாளும் காலேஜுக்கு வருவா.மாதம் விலக வேண்டிய நாளும் வரலாம்.அதனால் என் ஆசாரத்துக்கு அங்க போய் எப்படி மிதிக்கிறது? அதனால தான் யோசனை செய்தேன்.அவன் ஆசையும் நிறைவேறணும் என் ஆசாரமும் கெடக்கூடாது.அதுக்கு ஒரே வழி,எந்த தீட்டாக இருந்தாலும் அந்த இடத்துல கோ பாத துளி பட்டுட்டா,அந்த இடம் பரிசுத்தமாயிடறதா சாஸ்த்திரத்தில இருப்பதால்,பசுமாட்ட முன்னால் விட்டு பின்னாலேயே நானும் போயிட்டு வந்தேன் என்று சொன்னதைக் கேட்ட அனைவரும் பிரமிப்பில் இருந்து மீளவே இல்லை.
இப்படியும் தர்ம சூட்சமமா? இப்படியும் அறம் வழுவா துறவு வாழ்க்கையா? காலத்தின் மேல் பழி போட்டு பழி பாபங்களுக்கு அஞ்சாதவர்கள் நிறைந்த இப்பூமியில் ஒரு அறநெறிச் செம்மலா
அன்பையும் அறத்தையும் அழகாக் இணைக்கும் சாமர்த்தியம் நம் காஞ்சி மஹானைத் தவிர வேறு யாருக்கு

"சிருங்கேரி மடம், காஞ்சி மடத்துக்கிடையே ஏதோ கசமுசா என்று சிலர் பேசுவார்களே?"

சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன். 
நன்றி; வானதி பதிப்பகம்
சிவராஜன் வீட்டில் பலவகையான கஷ்டங்கள், எந்தக் காரியத்தைத் தொட்டாலும் தோல்வி. இன்னது என்று கண்டுபிடிக்க முடியாத சிறு சிறு நோய்கள். வீட்டில் அன்யோன்யம் குறைந்தது. ஜோஸ்யர் சொன்னார், "உங்கள் ஜாதகப்படி பெரிய குற்றம் (தோஷம்) ஏதுமில்லை.அம்பாள் க்ஷேத்திரங்கள் ஐந்து இடங்களுக்குச் சென்று தரிசனம் செய்யுங்கள்.அதுவே போதும்" காஞ்சி காமாக்ஷி,மதுரை மீனாக்ஷி, காசி விசாலாக்ஷி என்று பிரபலமாகக் கூறப்படுகின்ற அம்பிகைகளைத் தரிசனம் செய்துவிட்டார், சிவராஜன். இன்னும் இரண்டு சக்திபீடங்கள் போக வேண்டும். பெரியவாளிடம் வந்து விண்ணப்பித்துக்கொண்டார்.
"பெரியவா உத்திரவு செய்கிற க்ஷேத்திரம் போய் தரிசனம் செய்கிறேன்." தொண்டு செய்யும் சிஷ்யரைப் பார்த்தார்கள், பெரியவாள், " நீதான் ரெண்டு அம்மன் க்ஷேத்திரம் சொல்லேன்..." அவர் உடனே, "திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி, திருவொற்றியூர் வடிவுடையம்மன் (திரிபுரசுந்தரி)" என்றார்.
"ரொம்ப சரி...இந்த ரெண்டு கோயில்லேயும் ஆதிசங்கரர் தரிசனம் பண்ணியிருக்கார். நான் ரெண்டு க்ஷேத்ரம் சொல்றேன். அங்கே முதல்லே போயிட்டு வா, வந்து திருவானைக்கா திருவொற்றியூர் போகலாம் என்ன?"
"உத்திரவுப்படி..."
"சிருங்கேரி சாரதாம்பாள், கொல்லூர் மூகாம்பிகை தரிசனம் பண்ணு முதல்லே..."
சிவராஜன் திருப்தியுடன் சென்றார்.
அருகிலிருந்தவர்களுக்குத்தான் ஆச்சரியமாக இருந்தது.எவ்விதத் தயக்கம் இல்லாமல்,சிருங்கேரி சாரதாம்பாள் தரிசனம் செய்யச் சொல்கிறார்களே?.
சிருங்கேரி மடம், காஞ்சி மடத்துக்கிடையே ஏதோ கசமுசா என்று சிலர் பேசுவார்களே? அது பொருளற்ற வார்த்தை என்பதைப் பெரியவாள் சுட்டிக் காட்டி விட்டார்கள். "அந்த ரெண்டு க்ஷேத்திரத்திலும் ஆதிசங்கரர் தபஸ் பண்ணியிருக்கார். க்ஷேத்திரவாசமே ரொம்பப் புண்ணியம்" என்றார்கள்,பெரியவாள்.

‘மத்தவங்க கஷ்டத்தை போக்கணும்னு நினைச்சோம்னாலே, நம்ம கஷ்டம் போயிடும்

காஞ்சி மடத்துல மகா பெரியவா இருந்த சமயத்துல ஒரு சம்பவம் நடந்தது. ஒரு நாள் மகா பெரியவாளுக்கு வாய்ல புண்ணு வந்து அவரால பேசவே முடியாத நிலை. காஞ்சிபுரத்துலேயே இருந்த ஒரு மாமி இப்படி பெரியவா வாய்ல புண்ணோட கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கறத பார்த்துட்டு, வீட்டுக்குப் போயி பாலை காய்ச்சி அதுலேர்ந்து வெண்ணெயை எடுத்து வந்து பெரியவாகிட்ட கொடுத்தா.
பெரியவா, ‘என்ன விசேஷம் இன்னிக்கு கிருஷ்ண ஜயந்தி இல்லையே… எதுக்கு வெண்ணெய்?’னு கேட்டார். ‘நீங்க வாய் புண்ணோட கஷ்டப்பட்டுண்டு இருக்கீங்க. இந்த வெண்ணையை நீங்க வாய்ல வெச்சுண்டா போதும், உங்க வாய்ப் புண் சரியாயிடும்னு வெண்ணெய் பண்ணி கொண்டு வந்தேன்’னு சொல்லி மாமி தொன்னையோட இருந்த வெண்ணெய பெரியவா முன்னாடி வெச்சா.
அப்போ திடீர்னு ஒரு குழந்தை ஒன்றரை வயது இருக்கும். ஓடி வந்து பெரியவாளை பார்த்து சிரிச்சது. பெரியவா ‘என்ன வேணும்’னு அந்தக் குழந்தைகிட்ட கேட்டதும், ‘அந்த வெண்ணெய் வேணும்’னு சொல்ல, பெரியவா அப்படியே தொன்னையோட குழந்தைக்கிட்ட கொடுத்துட்டார்.
வெண்ணெய் கொண்டு வந்த மாமிக்கு கோபம், வருத்தம் எல்லாம் வருது. அங்க இருந்த சிப்பந்திகளுக்கும் கோபம், குழந்தை கேட்டா கொஞ்சமா கொடுத்திருக்கலாமேன்னு. அந்த குழந்தை பெரியவா கொடுத்த வெண்ணையை சாப்பிட்டு விட்டு ஓடியே போய்விட்டது. எங்கே போச்சுன்னு யாருக்கும் தெரியல.
அடுத்த நாள் அதே மாமி சாயந்திரமா மடத்துக்கு வந்தா. பெரியவா மாமியை பார்த்து, ‘என் வாய் புண் சரியாயிடுத்து, இப்போ எனக்கு நன்னா பேச முடியறதுன்னு’ சிரிச்சிண்டே சொன்னார். ‘அந்த வெண்ணெயை நான் சாப்பிட்டா என்ன கிருஷ்ணர் சாப்பிட்டா என்ன’ன்னு கேட்டார் பெரியவா.
மத்தவங்க கஷ்டத்தை போக்கணும்னு நினைச்சோம்னாலே, நம்ம கஷ்டம் போயிடும்’னு பெரியவா நமக்கு போதிக்கறா மாதிரி இல்லையா?
‘குருமகிமை’ என்ற தம் சொற்பொழிவில் பி.சுவாமிநாதன் (தீபம் ஆன்மீக இதழ்

வணங்காமுடிராஜான்னா யாருன்னு உனக்குத் தெரியுமோ

இந்தப் பெயரை ஸ்ரீபெரீவாளின் திருவாக்கால் கேட்ட அத்தருணத்திற்கு முன்வரையிலும் நான் கேள்வியுற்றதில்லை…
ஒருநாள் நண்பகல்..
ஸ்ரீபெரீவாளின் திருமுன்பு நரைத்த பெரும் மீசையுடன், தன் வற்றலான தேகத்தை மறைக்கும் கசங்கிய சரிகைச் சட்டையுடன் ஒரு முதியவர் அமர்ந்திருந்தார்..
அவர் அருகில் ஒர் சிறுவன்.. அவனுக்கு சுமார் பன்னிரண்டு பிராயம் இருக்கலாம்..
அம்முதியவர் கையில் ஒரு மரப் பெட்டி இருந்தது.. பெட்டியில் மங்கலான எழுத்தில் இனிஷியல் காணப்பட்டது..
ஸ்ரீபெரீவா அந்த முதியவருக்கு மிகச் சமீபத்தில் வந்து அமர்ந்து கொண்டார்கள்.. அம்முதியவர் நீண்ட நேரம் பேசிக்கொண்டேயிருந்தார்..
ஸ்ரீபெரீவா, அவரின் மனக்குறைகளை நிதானமாகக் கேட்டுக் கொண்டார்கள்..
தன்னுடைய வாழ்க்கைத் துன்பங்களை ஸ்ரீபெரீவா ஸன்னதியில் கொட்டித் தீர்த்துவிடவேணுமென்ற தீர்மானத்துடன் அவர் வந்திருப்பது போலிருந்தது..
ஒருவழியாக அம்முதியவர் பேசி முடித்தார்..
சிறிது அமைதி..
அதுவரை ஏதும் பேசாமல் இருந்த ஸ்ரீபெரீவா, அம்முதியவருடன் வந்த சிறுவனைப் பார்த்து “வணங்காமுடிராஜான்னா யாருன்னு உனக்குத் தெரியுமோ?” என்று கேட்டார்கள்..
உடனே அச்சிறுவன் தன்னுடைய தாத்தாவை நோக்கிக் கை காட்டினான்…
அம்முதியவர்தான் உடையார்பாளையம் ராஜா..
“கச்சியுவரங்க காளக்க தோழப்ப பெரியகுழந்தை மஹாராஜா” என்பது அவர் பெயர்..
குடைமேலிருந்து குஞ்சரம் ஊர்ந்த உடையார்பாளையம் பாளையக்காரர்கள் காலச் சக்கரத்தின் சுழற்சியில் சிக்கி நலிவுற்றனர்.. சொத்துக்கள் பராதீனத்துக்காளாயின… இத்தனை துன்பத்திலும் மிடுக்குக் குறையாமல் இருந்த மன்னர் பெரியகுழந்தை ராஜாவும் ஒரு நாள் தளர்ந்து போனார்…
தன் மனக்குறைகள் யாவற்றையும் காஞ்சிபுரத்திலிருந்த பெரிய எசமானிடம் கொட்டித் தீர்த்துவிட வேண்டும் என்ற வேகத்துடன் அன்று வந்திருந்தார்.
முகலாயர்கள், ப்ரெஞ்சுக்காரர்கள், இங்க்லீஷ்காரர்கள் என்று எத்தனையோ பெரும் சைன்யங்கள் பல சந்தர்ப்பங்களில் உடையார்பாளையத்தைக் கைப்பற்றத் துடித்து பெரும் முற்றுகைகள் நிகழ்ந்துள்ளன.
ஆனால் எக்காலத்திலும் யாருக்கும் தலைவணங்காமல் மிகுந்த துணிவுடன் போரிட்டும், பல யுக்திகள் மூலமாகவும் அம் முற்றுகைப்போர்கள் யாவற்றிலும் உடையார்பாளையத்தாரே வென்றுள்ளனர்.. அதனால் அவர்களுக்கு “வணங்காமுடிராஜா” என்ற சிறப்புப் பெயர் ஏற்பட்டது..
தன்னை “வணங்காமுடிராஜா” என்று தன் பேரன் வாயிலாக எசமான் (ஸ்ரீபெரீவா) குறிப்பிட்டதும்.. பெரியகுழந்தை ராஜா மனஸுக்குள் தன் வங்கிசத்தின் வணங்காமுடிப் பெருமை மறுபடியும் தோன்றியது..
“நம்ப பரம்பரைக்கு இருக்குற வணங்காமுடிராஜாங்கற பட்டம் எப்பேர்ப்பட்டது.. எத்தனை கஷ்டம் வந்தாலும் யாரிடமும் நம்ப தல குனியக்கூடாது.. மனஸ் தெம்புடன் எல்லாத்தையும் சமாளிச்சுதான் கடக்கணும்.. அதான்.. ஸாமி.. எசமான் ஒரு வார்த்தையில சொல்லிப்புட்டாங்களே.. போயும்.. போயும் கேவலம் சம்சாரச் சுழலைப் பற்றி இவ்வளவு நேரம் எசமான்கிட்டே பேசிட்டோமே. அவாளை ச்ரமப்படுத்திட்டோமே.” என்று வருத்தப்பட்டுக் கொண்டார் பெரியகுழந்தை ராஜா..
“ஜன்மத்துக்கும் எசமான் அருள் மட்டும் போதுங்க… எசமான் சன்னிதானத்தில் என்னிக்கும் பக்தியோடே இருக்கணுங்க” என்று ஸ்ரீபெரீவாளிடம் மனம் குவித்துப் ப்ரார்த்தித்தார்..
பாரம்பர்யமாக அவருக்கு ஸ்ரீமடத்திலிருந்து செய்யப்படும் மரியாதைகளைப் ஸ்ரீபெரீவா ஆக்ஞைப்படி ஸ்ரீபாலபெரீவா முன்னிலையில் பெற்றுக்கொண்டார்..
ஸ்ரீபெரீவா மற்றும் ஸ்ரீபாலபெரீவா இருவரையும் நமஸ்கரித்து விடைபெற்றார் ராஜா..
அன்று இரவு.. ஸ்ரீபாலபெரீவா அவர்களின் ஸன்னதியில் நின்றிருந்தேன்..
நண்பகலில் நடந்த இந்நிகழ்வு பற்றி ஸ்ரீபாலபெரீவா என்னிடம் மீண்டும் நினைவு கூர்ந்தார்கள்..
ஸ்ரீபாலபெரீவாளுக்கு சரித்திரத்தில் பெரும் பயிற்சி உண்டு.. சிலாசாசனங்கள், செப்பேடுகள், பழந்தமிழ் மற்றும் க்ரந்தச் சுவடிகளை அனாயாசமாக வாசித்துக் காட்டுவார்கள்.. பண்டைய வரலாற்றுப் பதிவுகள் யாவற்றையும் தம் விரல் நுனியில் வைத்திருப்பார்கள்.. ஸ்ரீபெரீவாளும் அவ்வப்பொழுது ஸ்ரீபாலபெரீவாளிடம் அரிய பல சரித்திர விஷயங்களைப் பற்றிச் சொல்லி மென்மேலும் ஊக்குவிப்பார்கள்..
நல்லதொரு சந்தர்ப்பம் வாய்த்ததென்று எண்ணி உடையார்பாளையம் பற்றி ஸ்ரீபாலபெரீவாள் சொல்லியவற்றை நன்றாக மனத்தில் வாங்கிகொண்டேன்..
“வன்னிய குல க்ஷத்ரியர்களான உடையார்பாளையம் ராஜ வம்சத்தினர் காஞ்சிபுரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள்.. பல நூற்றாண்டு காலமாக ஸ்ரீமடத்தின் அடியவர்கள்..
பல்லவ, சோழ மன்னர்களின் காலத்திலிருந்தே தொடர்ந்து நாடாண்டவர்கள்.. விஜயநகர மன்னர் வீரநரசிம்மராயர் காலத்தில் தஞ்சை ராமபத்ரநாயக்கர் தலைமையின்கீழ் பாமினி (பீடார்) ஸுல்தானுடன் பெரும் போரிட்டு, இறுதியில் பரீத்ஷா என்னும் அந்த பாமினி ஸுல்தானை ஏழு துண்டுகளாக வெட்டி “பரீத் ஸப்தாங்க ஹரண” என்னும் சிறப்பு விருதைப் பெற்ற பெரும் வீரர்..
17ம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தைப் போர் மேகங்கள் சூழ்ந்தபோது, காஞ்சியிலிருந்து செஞ்சிக் கோட்டைக்குப் பாதுகாப்பிற்காக எடுத்துச் செல்லப்பட்ட ஸ்ரீஸ்வர்ண(பங்காரு)காமாக்ஷி அம்பாள், ஸ்ரீவரதராஜ ஸ்வாமி விக்ரஹங்களை, பிற்பாடு உடையார் பாளையத்திற்குக் கொண்டுவந்து பாதுகாத்தவர்கள்..
சிதம்பரம், கங்கைகொண்டசோழபுரம் முதலிய தலங்களைப் புரந்தவர்கள்.. தருமபுரம், திருவாவடுதுறை முதலிய பல சைவ ஆதீனங்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்.. பல வித்வான்களை தம் ஸம்ஸ்தானத்தில் வைத்து அன்புடன் ஆதரித்தவர்கள்..
உ.வே.ஸ்வாமிநாத ஐயர் இந்த ஸம்ஸ்தானத்தைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார்.. ஸ்ரீமடத்திற்கு உடையார்பாளையம் ராஜ வம்சத்தினர் செய்திருக்கும் அரும் பணிகள் ஏராளம்…
ஸ்ரீஆசார்யஸ்வாமிகளின் யாத்ரை ஸவாரியில், ஸ்ரீசந்த்ரமௌளீச்வர ஸ்வாமியின் பூஜா மண்டபம், ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகளின் சப்த கலச அம்பாரி, ஸிம்ஹாஸனம் மற்றும்பல்லக்கைத் தூக்கிவரும் போகிகள்,
தலைப்பாகையணிந்து ராணுவ உடுப்புடன் கருப்பு மற்றும் வெள்ளைக் குதிரைகளின் மீதேறி ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகளின் ஸவாரியில்முன்னால் வரும் ஸிப்பாய்கள், டங்கா வாத்யம் வைத்துக் கட்டிய குதிரை மேல் வருபவன்,
ஒட்டகச்சிவிங்கிகள், ஒட்டகங்களின் மீதேறி வரும் முஸல்மான்கள், (ஸ்ரீபெரீவா காலத்தில் பாஜி என்று ஒரு ஒட்டகக்காரன்இருந்தான்) கைதீவட்டிக் காரர்கள், ஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகளின் மரச் சாமான்களைத் தம் தலையில் சுமந்தபடி உடன் ஓடி வரும் காலாட்கள், ஸ்ரீமடத்தில் இருந்து வரும் ப்ராசீன வாத்யமான கௌரிகாளை ஊதுகிறவர்கள், மற்றொரு பழைய வாத்யமான திமிரி நாகஸ்வரம் வாசிக்கிறவர்கள், நகரா, டவண்டை, ஸுத்த மத்தளம் மற்றும் தவில் வாத்யங்களை வாசிக்கிறவர்கள், உள்பாரா மற்றும் வெளிப்பாராக்காரர்கள், யானைப்பாகர்கள், மாட்டுவண்டி ஓட்டுபவர்கள், இதர பணி செய்பவர்கள்..என்று ஸுமார் இருநூறு, முன்னூறு பேர் ஆட்கள் ஸ்ரீமடம் முகாமில் எப்போதும் நிறைந்து இருப்பர்..
ஸ்ரீஆசார்யஸ்வாமிகளின் பல்லக்கைச் சுமந்து செல்ல பதினாறு போகி ஆட்களையும், அவர்களுக்குத் தலைவனாக பெத்தபோகியாக ஒரு அனுபவஸ்தனையும் சேர்த்து மொத்தம் பதினேழு போகியாட்களை உடையார்பாளையத்திலிருந்து ஸ்ரீமடத்திற்கு அனுப்பி வைப்பது நீண்ட கால வழக்கம்.
ஒவ்வொரு வருஷமும் வ்யாஸபூஜை ஆகி பின்னர் இரண்டு மாஸங்கள் ஸ்ரீஆசார்யஸ்வாமிகள் சாதுர்மாஸ்ய வ்ரதம் அநுஷ்டித்து ஓரிடத்தில் தங்கி இருப்பார்கள்.
ஸ்ரீஆசார்யஸ்வாமிகள் சாதுர்மாஸ்ய வ்ரதம் துவங்கியவுடன் முன் வருஷத்து சாதுர்மாஸ்யத் துவக்கத்திலிருந்து போகிகளாக இருப்பவர்களின் குழுவினர் விடைபெற்றுச் சென்று விடுவர். பிறகு, பதினேழு பேர் கொண்ட புதிய வருஷத்துக் குழுவினர் சாதுர்மாஸ்யம் நிறைவுறுவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக ஸ்ரீமடம் முகாமிற்கு வந்துவிடுவார்கள்.
இப்படி ஸ்ரீமடம் கைங்கர்யத்தில் பல தலைமுறைகளாக இருக்கும் குடும்பத்தினருக்கு உடையார்பாளையம் ராஜ்யத்தில் மான்யமும் தரப்பட்டிருந்தது. ஸ்ரீமடத்தில் போகியாட்கள் வேலை பார்க்கும் ஸமயங்களில் ஒவ்வொரு நாளும் இவர்களுக்கு படிகாசும், படியரிசியும் தரப்படும்.
ஸ்ரீபெரீவாளும் பலமுறை உடையார்பாளையத்திற்கு விஜயம் செய்திருக்கிறார்கள்.. ஸ்ரீபெரீவா உத்தரவுப்படி ஸ்ரீபுதுப்பெரீவாபொன்விழா சமயத்தில் மாயவரம் வக்கீல் ஸி.ஆர்.கே. தலைமையில் ஸ்ரீமடத்தின் மூலம் உடையார்பாளையம் சிவாலயத்தைத்திருப்பணி செய்து தந்தது..“ என்று ஸ்ரீபாலபெரீவா அனேக விஷயங்களை அடுக்கடுக்காகச் சொன்னார்கள்.. ஜாஜ்வல்யமாக அக்காலத்தில் ப்ரகாசித்துக்கொண்டிருந்த உடையார் பாளையம் ஸம்ஸ்தானம் என் மனக்கண்களில் தெரிந்தது..பண்டைய சுதேச ஸம்ஸ்தானங்கள் எல்லாவற்றுக்கும் இருந்த அதே தலைவிதிதான் உடையார்பாளையத்திற்கும் இருந்தது..கணக்கில்லாத சந்ததிகளும், தட்டுமுட்டுஸாமான்களும், பராமரிக்க முடியாத அரண்மனையும், கோர்ட்டு வ்யாஜ்யங்களும்தான் நவீன காலத்தில் எஞ்சி இருந்தன..
… இந்நிகழ்ச்சிக்குப்பின் சில வருடங்கள் கடந்தன..
ஜனவரி 8ம் தேதி 1994ம் வருஷம்.. ஸ்ரீபெரிவா காஞ்சீபுரத்தில் ஸித்தியடைந்துவிட்ட சேதியறிந்து பதைத்துப்போய் காஞ்சீபுரத்திற்கு விரைந்தேன்..
செங்கல்பட்டை அடைந்தபோது அதிகாலை 3 மணி இருக்கும்.. அங்கிருந்து ஒரு டாக்ஸி பிடித்து காஞ்சீபுரம் போய்விடலாம் என்று எண்ணம்..
நல்ல பனி.. குளிர்..
அந்த நேரத்தில் ஒரு டாக்ஸி தற்செயலாக அங்கு நின்றிருந்தது.. டாக்ஸி டிரைவரும் வருவதாகச் சொல்லி வண்டியைக் கிளப்ப எத்தனித்தார்.. வண்டியின் பக்கக் கண்ணாடி வழியே பார்த்தபோது..
ஒரு முதியவர் குளிரைத் தாங்க முடியாமல் போர்த்திக்கொண்டு தன்னந்தனியே ரோட்டின் ஓரத்தில் வண்டிக்காக நிற்பது தெரிந்தது..
கூர்ந்து நோக்கினேன்..
“அட.. வணங்காமுடி ராஜான்னா இவர்…!”
அவர் எதற்காக அங்கு வந்திருக்கிறார் என்று யூகிக்க முடிந்தது… வண்டியிலிருந்து இறங்கி அவர் அருகில் சென்றேன்…
நாங்களும் ஸ்ரீமடத்திற்கு விரைந்து கொண்டிருப்பதைச் சொல்லி அவரையும் வண்டியில் அமர்த்திகொண்டு புறப்பட்டோம்..
அன்று ஸ்ரீபெரிவா தம்மை வணங்காமுடி ராஜா என்று சொல்லி நடப்பு வாழ்க்கைத் துன்பங்களைத் தாங்கிக் கொள்ளும் பக்வத்தைத் தனக்கு குறிப்பால் உபதேசித்ததை ராஜா சொல்லிக்கொண்டே வந்தார்..
ஸ்ரீமடம் வந்து சேர்ந்தோம்..
உள்ளே வந்து பார்த்தபோது, மேடையில் ஸ்ரீபெரீவாளின் ஊனுடம்பு ஆலயமாகக் காட்சியளித்தது….
“வணங்காமுடிராஜான்னா யாருன்னு தெரியுமோ? என்று ஸ்ரீபெரிவா அன்று செய்த உபதேசக் காட்சி மீண்டும் என் நெஞ்சில் நிறைந்தது..

"விடுங்கோ மாமா!" ("அது என்ன விடக்கூடிய காலா! பின்னாலே இதனடியில் விழ மக்கள் க்யூவிலே நிற்கப்போகிறார்களே!" )

திடீரென்று ஒரு நாள் காலை மகாலட்சுமி [பெரியவாளின் தாயார்] கண் விழித்தபோது, பக்கத்தில் சுவாமிநாதனைக் காணவில்லை. வீடெல்லாம் தேடியாகிவிட்டது. ஊர் மூலைகளெல்லாம் துழாவி வந்தாகிவிட்டது....காணோம். "ஒருவேளை சிநேகிதன் கிருஷ்ணஸ்வாமி வீட்டுக்குப் படிக்க சென்றுவிட்டானோ?" என்று போய்ப் பார்த்தால், முதலுக்கே மோசம்.நண்பனையும் காணோம்!.
இரண்டு குழந்தைகளையும் தேடி ஊரே அல்லோலகல்லோலப்பட்டது.அந்த சமயத்தில் மடத்திலிருந்து ஒரு ஆள் வந்து, குழந்தைகள் மடத்துக்கு வந்தார்கள்.பத்திரமாக இருக்கிறார்கள். சுவாமிகள் உங்களிடம் சொல்லிவிட்டு வரச் சொன்னார். நாலு
நாட்கள் வைத்திருந்து அப்புறம் குழந்தைகளை அனுப்புவதாகச் சொன்னார்!" என்றார். இதைக் கேட்ட பெற்றோருக்கு எதுவும்புரியவில்லை. "எதற்காக அத்தனை பெரிய குரு இத்தனை சின்னக் குழந்தைகளை விடாமல் வைத்துக் கொள்ள வேண்டும்?" என்பது புதிராக இருந்தது.
உண்மை இதுதான். ஒரு நாள் சுவாமிநாதன், ஜகத்குருவாக மலர்ந்து காமகோடி பீடத்தை அலங்கரிக்கப் போகிறார், தன்னுடைய முடிவும் நெருங்கிவிட்டது.பின்னால் இவனுடன் சில நாட்கள் சேர்ந்திருக்க வாய்ப்பு கிடைக்கப் போவதில்லையே?
அந்த ஆசையை நாலு நாளாவது வைத்துக்கொண்டு தீர்த்துக் கொள்ளலாம் என்று பரம குருவானவர், தீர்க்க திருஷ்டியுடன் முடிவு செய்திருக்க வேண்டும். சுவாமிநாதன் அவரை பெருமுக்கலில் பார்த்ததற்கு அடுத்து அவர் ஸாரம் என்ற இடத்துக்குப் போய்விட்டார். இந்தக் குழந்தைக்கோ அவரைப் பார்த்தது முதல் வீட்டில் இருப்பே கொள்ளவில்லை. உடனே, சொல்லாமல் கொள்ளாமல் துணைக்கு சிநேகிதனையும் அழைத்துக் கொண்டு அங்கே போய்விட்டான்.
ஆச்சார்யரோ, "முதலில் ஆத்திலே சொல்லிட்டு வந்தாயா?" என்று கேட்டார். "இல்லை ஸ்வாமி! உங்களைப் பாக்கணும்னு தோணித்து: உடனே கிளம்பி வந்துட்டேன்" என்கிறான் குழந்தை.
இதற்காக குரு சந்தோஷப்பட்டாராம். ஏனெனில், இப்படி வீட்டையும் வாசலையும் விட்டு வரவாதானே அவருக்கு வேணும்!
எல்லா தகப்பனாரையும் போல் தன் பிள்ளை டாக்டராக அல்லது இன்ஜினீயராக வர வேண்டுமென்று தந்தை சுப்ரமண்ய சாஸ்திரிகள் ஆசைப்பட்டார். இத்தனை சின்ன வயசில் இப்படி மடத்தை நோக்கி ஓடினால் எந்தத் தந்தைதான் கவலைப்படமாட்டார்?
"இது என்ன தேறுமா...தேறாதா? படிப்பு கிடிப்பு வருமா?"
என்ற பயம் அவரை உலுக்கியது. உடனே சிநேகிதன்
கிருஷ்ணஸ்வாமியின் அப்பா வெங்கட்ராமனைத் தேடிப் போனார். அவர் ஒரு சிறந்த ஜோதிடர்.மேலும் சுப்ரமண்ய ஐயருக்க நெருங்கிய நண்பர்.
"வெங்கட்ராமா! சுவாமிநாதன் ஜாதகத்தைக் கொஞ்சம் பாரு. இவனுக்கு ஜாதகம் எப்படி இருக்கு?" என்று காட்டினார்.அதைப் பார்த்ததும் ஜோசியருக்குப் பேச்சே வரவில்லை.சுவாமிநாதன் சாட்சாத் ஈஸ்வரன் என்று தெரிந்தது. ஆனால், ஆவலோடு பார்த்துக் கொண்டிருக்கும் நண்பனுக்கு ஏதாவது சொல்ல வேண்டும். அதனால், "சுப்ரமண்யா! நீ உன் பிள்ளையைப் பற்றிக் கவலையேபடாதே. நம்மைப் போன்றவர்கள் வீட்டில் பிறக்கும் குழந்தையாகத் தெரியவில்லை. இவன் ஜாதகத்தில் பெரிய ராஜாக்களுக்கு உண்டான யோகமெல்லாம் இருக்கு. சக்ரவர்த்தியாக உலகமே கொண்டாட வாழப் போகிறான்!" என்று பெசினார்.
வெறும் ராஜாவாகவா மாறினார்! உலகை உய்விக்க வந்த யதிராஜராக அல்லவா ஒளி வீசினார்!.
அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், ரேகைகளையும் பார்க்கஆவல்கொண்டஜோசியர்,அங்கிருந்த
சுவாமிநாதனிடம் ,"போய் கால் அலம்பிண்டு வா" என்று கட்டளையிட்டார். அலம்பிக்கொண்டு வந்தவனை,நாற்காலி ஒன்றில் அமர்த்தி அழுக்கு ஒட்டிக் கொண்டிருந்த காலில் தண்ணீர் விட்டுத் தன் கையாலேயே அலம்பினார்....துடைத்தார். சற்று தூக்கிப் பார்த்தார்.அப்படியே கெட்டியாய் பிடித்துக் கொண்டு அழுதார். காலை விடவேயில்லை.
"விடுங்கோ மாமா!" என்ற சிறுவனின் குரலோ,
"என்ன இது! குழந்தை காலை பிடிச்சுண்டு...விடு" என்ற சுப்ரமணிய சாஸ்திரியின் குரலோ ஜோசியர் காதில் விழவேயில்லை.
"அது என்ன விடக்கூடிய காலா! பின்னாலே இதனடியில் விழ மக்கள் க்யூவிலே நிற்கப்போகிறார்களே!" என்று நினைத்தார் போலும்.
காலில் உள்ள சங்கு சக்கர ரேகைகள், மகர ரேகை, தனுர் ரேகை, பத்ம ரேகை எத்தனை உண்டோ, அத்தனையும் ஒரு அவதார புருஷன் அவர் என்று கட்டியம் கூறிக் கொண்டு பளிச்சென்று அவர் கண்ணுக்குப் புலப்பட்டன.
முதன் முதலில் பெரியவாளுக்குப் பாத பூஜை பண்ணும் பாக்கியம் இந்த வெங்கட்ராமய்யருக்குத்தான் கிடைத்தது.நல்ல கைராசிதான்!
விஷ்ணுவுக்கும் கிடைக்காத பாதத்தை இவர் பார்த்துவிட்டார் என்றால், இவர் பாக்கியமே பாக்கியம்!.

"யாருக்கு எப்போ எதைக் கொடுத்தா நல்லது?

எந்த சமயத்துல தந்தா, அது அவாளுக்கு பயன்படக்கூடியதா இருக்கும்? கேட்டதைத் தர்றதா, கேட்காததைக் குடுக்கறதா? இதெல்லாம் சுவாமியோட தீர்மானப்படி நடந்தா நல்லது. நாம கேட்கலாமே தவிர, பகவான் குடுக்கறதை மனப்பக்குவத்தோட ஏத்துக்கணும்".
மஹா பெரியவா சொன்ன வித்யாரண்யர் வரலாறு.

விஜய நகர சாம்ராஜ்யம்னு வரலாறுல படிச்சிருப்பேள். அந்த ராஜ்யம் அமையறதுக்கு காரணமானவர், பரம சன்யாசியான வித்யாரண்யர். சன்யாசம் ஏத்துக்கறவா எல்லாரும், எதுவுமே வேணாம்னுட்டு ஆஸ்ரமம் ஏத்துக்குவா. ஆனா, இவர் சன்யாசி அனதே வித்தியாசமான காரணத்துக்காக.
வித்யாரண்யர்ங்கறது அவரோட ஆஸ்ரமப் பேர், பூர்வாஸ்ரமப் பேர் என்னன்னு தெரியலை. ஆனா, அவர் பரம ஏழ்மையா இருந்தார். கஷ்டமெல்லாம் தீரணும்னா அதுக்கு ஒரே வழி மகாலட்சுமியோட கடாட்சம் தன்மேல படறதுதான்னு தீர்மானிச்சு, கடுமையா தவம் பண்ணினார். அவரோட தவத்துக்கு இரங்கி காட்சி தந்தா திருமகள்.
"அம்மா... அலைமகள்ங்கற உன்னோட பேருக்கு ஏத்த மாதிரி உன்னோட பார்வையை அங்கே இங்கேன்னு அலையவிடாம, என்மேல கொஞ்ச நாழி பதிச்சியான்னா. என்னோட வறுமையெல்லாம் தீர்ந்துடுமனு வேண்டிண்டார்.
"இவ்வளவு கடுமையா தபஸெல்லாம் பண்ணி என்னை கும்பிட்டிருக்கே, அதுக்காகவாவது நான் உனக்க வரம் தந்துதான் ஆகணும். ஆனா, உன்னோட விதியில இந்த ஜனமாவுல உனக்கு வறுமைதான்னு எழுதியிருக்கு, அதை என்னால மாத்த முடியாது. அதனால உன்னோட அடுத்த ஜன்மாவுல தங்கச் சுரங்கமாவே செல்வம் தர்றேன்! இப்போ வேற ஏதாவது வேணும்னா கேளு!' அப்படின்னா மகாலட்சுமி.
திக்குன்னு ஆச்சு, வித்யாரண்யருக்கு. பிரம்மசரியம் அனுஷ்டிக்கற பருவத்துலயே இந்த வறுமையை தாங்கிக்க முடியலையே... இன்னும் இந்தப் பிறவி முழுக்க இதை அனுபவிக்கணும்னா அவ்வளவுதான். இங்கேயே நரகவாசம் பண்றாப்புல ஆயிடுமே... இதுல இருந்து தப்பிக்க ஏதாவது வழி இருக்குமான்னு யோசிச்சார். சட்டுன்னு ஓர் எண்ணம் தோணித்து அவருக்கு.
ஒருத்தர் சன்யாசம் ஏத்துண்டார்னா, அது அவரோட ரெண்டாவது ஜென்மான்னு சொல்றது சாஸ்த்ரம். நம இப்ப உடனே சன்யாசம் ஏத்துண்டுட்டா, இந்த ஜென்மா முடிஞ்சு அடுத்த ஜன்மா எடுத்துட்டதா ஆயிடும். அப்போ மகாலட்சுமி நமக்கு வரம் தர்றதுல எந்த பிரச்னையும் இருக்காது! அப்படின்னு தோணித்த அவருக்கு.
உடனே, "தாயே மகாலட்சுமி நான் இந்த க்ஷணமே சன்யாசம் வாங்கிக்கறேன். இப்போ இது என்னோட ரெண்டாவது ஜன்மாவா ஆயிடுத்து... அதனால நீ சொன்னபடிக்கு எனக்கு செல்வத்தைக் குடு!'ன்னு கேட்டார் வித்யாரண்யர்.
மறுவிநாடியே அவர் பார்த்த இடமெல்லாம் தங்கமா மாறித்த. மலைமலையா பெரும் தங்கக் குவியல் அவரை சுத்தி இருந்தது. பார்த்தார் வித்யாரண்யர்.
அவரோட கண்ணுல இருந்து ஜலம் அருவிமாதிரி கொட்டித்து. "ஆஹா.. இவ்வளவு செல்வம் கிடைச்சும் இதுல ஒரு தூசியைக்கூட தொட முடியாதபடிக்கு சன்யாசம் வாங்கிட்டோமே... சன்யாசிக்கு எதுக்கு இவ்வளவு தங்கம்?
தாயார் சொன்னபடிக்கு அடுத்த பிறவியில வாங்கியிருந்தாலாவது அதை "னுபவிச்சிருக்கலாம். இப்போ தெய்வத்தை ஏமாத்தறதா நினைச்சுண்டு நம்பளை நமளே ஏமாத்திண்டிருக்கோம். சரி, நடந்ததை மாத்திக்க முடியாது. இனிமேலாவது நல்லபடியா ஏதாவது பண்ணுவோம்' னு நினைச்சார். கண்ணுக்கு எட்டின தூரத்துல யாராவது இருக்காளான்னு பார்த்தார்.
கொஞ்சம் தொலைவுல குறும்பர்கள் அதாவது ஆடு, மாடு மேய்க்கறவா ரெண்டு பேர் நின்னுண்டு இருந்தாங்க. துங்கபத்திரை நதியோட கரையில ஒரு ராஜாங்கத்தை ஸ்தாபிச்சு அதுக்கு அவா ரெண்டுபேரையும் ராஜாக்களா ஆக்கினார். செல்வம் முழுசையும் தந்து, மாலிக்காபூரோட படையெடுப்பால் சிதைஞ்சு போயிருந்த கோயில்களையெல்லாம் சீரமைக்கச் சொன்னார். அன்னிக்கு அவர் ஸ்தாபிச்சதுதான், விஜயநகர சாம்ராஜ்யம். ஹரிஹரர், புக்கர்தான் அந்த ரெண்டு ராஜாக்கள்.
அதுக்கப்புறம் வித்யாரண்யர் சன்யாச ஆஸ்ரமத்துல இருந்துண்டு. நாலு வேதங்களுக்கு பாஷ்யம் எழுதினார்.
யாருக்கு எப்போ எதைக் கொடுத்தா நல்லது? எந்த சமயத்துல தந்தா, அது அவாளுக்கு பயன்படக்கூடியதா இருக்கும்? கேட்டதைத் தர்றதா, கேட்காததைக் குடுக்கறதா? இதெல்லாம் சுவாமியோட தீர்மானப்படி நடந்தா நல்லது. நாம கேட்கலாமே தவிர, பகவான் குடுக்கறதை மனப்பக்குவத்தோட ஏத்துக்கணும்.
இந்த வித்யாரண்யர் வரலாறு மகாபெரியவா உபந்யாசங்கள் பண்றச்சே பலசமயங்கள்ல சொல்லியிருக்கார்.
செய்வத்துகிட்டே எப்படி நடந்துக்கணும்கறதுக்கு நடமாடும் தெய்வமான பரமாசார்யா சொன்ன இந்த வழிமுறை, சன்யாசிகளுக்கு மட்டுமல்லாம எல்லாருக்குமே பொருந்தும் இல்லையா?

சன்னியாசிகள் ஏன் பிட்சை வாங்க வேண்டும்?

சன்னியாசிகள் தங்களுக்குத் தேவையான உணவை அந்தந்த வேளைக்கு மட்டும் பிட்சை எடுத்து உண்ண வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அதில் மிகப்பெரிய தத்துவம் அடங்கியுள்ளது. தம்மைத் தாமே பக்குவப்படுத்திக் கொள்கிறார்கள். மானம், அவமானம் இவற்றைக் கடந்து எந்தவித விருப்பு, வெறுப்பும் இல்லாமல் பிட்சை எடுக்க வேண்டும். பிட்சை போட்டாலும், போடாவிட்டாலும், அது ருசித்தாலும், ருசிக்காவிட்டாலும் சமமாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வருவதற்காகவே பிட்சை உள்ளது. பிட்சை போடாத மனிதர்களை வெறுப்பது கூடாது. அவர்களையும் சமமாக நினைக்க வேண்டும்.
உண்மையான ஞானிக்கு சாப்பிடாமல் கூட இருக்க முடியும். அவர்களுக்கு பசி கிடையாது. ஞானிகளுக்கு நாம் உணவு அளிக்கும் பொழுது நம்முடைய பாவத்தை போடுகிறோம். ஞானிகள் தங்களுடைய புண்ணிய பலத்தை நமக்குத் தருகிறார்கள். எவ்வளவு உயர்ந்த தத்துவம் !
ஒருமுறை காஞ்சி மகா பெரியவர் ஒரு வாரம் முழுவதும் பிட்சைக்குப் போகாமல் மவுன விரதமிருந்தார். சீடர்கள் தாங்கள் ஏதேனும் தவறு செய்து விட்டோமோ என வருந்தி பெரியவரிடம் கேட்டனர். உங்கள் யாரிடமும் எனக்குக் கோபமோ, வருத்தமோ இல்லை. போன முறை பிட்சைக்குச் சென்ற பொழுது ஓர் அகத்தில் இட்ட கீரை மிகவும் சுவையாக இருந்தது. மறுநாளும் அதுமாதிரி இருந்தால் நன்றாக இருக்கும் என மனம் விரும்ப ஆரம்பித்தது. சுவையில் நாட்டம் சென்றதும் மனதைக் கட்டுப்படுத்த ஒரு வாரம் உண்ணாவிரதமும் மவுன விரதமும் இருக்கத் தீர்மானித்தேன். ஆதலால்தான் பிட்சைக்குப் போகவில்லை. இது எனக்கு நானே கொடுத்துக் கொண்ட தண்டனை. நீங்கள் யாரும் வருந்த வேண்டாம்! என்றாராம்.
எப்பேர்ப்பட்ட மகான் ! இது ஞானிகளின் மனப்பக்குவத்திற்கு உதாரணம்.
ஆதிசங்கரர் பிட்சை கேட்ட சமயம் ஓர் ஏழைப் பெண்மணி தனக்காக வைத்திருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியை (வேறு உணவு எதுவுமே இல்லாததால்) பிட்சை இட்டதால் அவர் வீட்டில் மகாலட்சுமி பொற்காசுகளை மழையாகப் பெய்வித்தாள் என்பது வரலாறு

என் பேர் எல்லோருக்கும் கடைசிலே இருக்கே. பெரியவா படிப்பிலே ‘மக்குன்னு நீ நெனச்சியோ?’

நான் திண்டிவனம் பள்ளிக்கு சென்று பெரியவா படித்ததற்கு அடையாளமாக ஏதாவது கிடைக்குமா என்ற ஆர்வத்தில் தலைமை ஆசிரியரின் அனுமதியுடன் பழைய ரெக்கார்ட்கள் வைக்கப்பட்டிருந்த அறையை துழாவினேன்.
அதிசயத்திலும் அதிசயமாக ஒரு வருகை பதிவேட்டின் ஒரே ஒரு காகிதம் மட்டும் கிடைத்தது. அது 1904 ஆம் வருடம், பெரியவா ரெண்டாம் பாரம் படித்தபோது, அந்த வகுப்பின் வருகை பதிவேட்டின் ஒரு ஷீட்.
அதில் ‘சுவாமிநாதன்’ என்ற பெயரை கண்டபோது எனக்கு மகிழ்ச்சி நிலைகொள்ளவில்லை. மறுநாளே, ஆந்திராவில் இருந்த பெரியவாளை தரிசிக்க சென்றேன்.
நடுநிசி, பூர்ண நிலா, பெரியவா ஓர் ஊரில் இருந்து வேறோர் கேம்ப் க்கு மேனாவில் பயணித்து கொண்டிருந்தார். கூடவே ஓடி, திண்டிவனம் சென்ற விவரத்தையும், ‘வருகை பதிவேடு’ காகிதம் கிடைத்த செய்தியையும் கூறினேன். சற்று தொலைவு சென்றதும் மேனா நின்றது. உடன் வந்தவர்களையும் மேனாவை தூக்கி வந்தவர்களையும் ஆகாரம் செய்து விட்டு, வரும்படி பணித்துவிட்டு, பெரியவா அந்த வருகை பதிவேட்டு ஷீட்டை வாங்கி டார்ச் லைட் லென்ஸ் உதவியோடு பார்த்தார். முகம் மலர்ந்தது.
"இது எப்படிடா உனக்கு கிடச்சுது?" என்று ஆச்சிரியத்துடன் கேட்டு விட்டு, அதில் இருந்த பெயர்களை ஒவ்வொன்றாக படித்தார். அறுபத்து நான்கு வருடங்கள் முந்தய நாட்களின் நினைவுகளில் ஒரு கணம் மூழ்கி போனார். தம்முடன் ரெண்டாம் பாரத்தில் படித்த மாணவர்களை நினைவு கூர்ந்தார்.
அவர்களில் யார் யார் அப்போது உயிருடன் இல்லை என்பதையும் மற்றவர்கள் எந்த ஊரில் இருக்கிறார்கள் என்பதையும் சொன்னார்.
இறுதியாக, ‘என் பேர் எல்லோருக்கும் கடைசிலே இருக்கே, பெரியவா படிப்பிலே ‘மக்கு’ ன்னு நீ நெனச்சியோ?’ என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.
‘இல்லே, பெரியவா பேர் ஏன் கடைசிலே இருக்குன்னு நெனச்சிண்டேன்’ என்ற உண்மையை சொன்னேன்.
‘என் பூர்வாச்ரம தகப்பனாருக்கு ஸ்கூல் இன்ஸ்பெக்டர் உத்தியோகம். அடிக்கடி அவரை, ஊர் மாத்திடுவா. சிதம்பரத்திலேருந்து திண்டிவனத்துக்கு செப்டம்பர் மாசம் மாத்தலாயி வந்தார். பாதியிலே வந்து இந்த ஸ்கூல் லே சேர்ந்தேன். அதனால தான் என் பேரு கடைசிலே இருக்கு’ என்று விளக்கம் தந்தார்.

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்துதி

மஹாத்புத சேகரம்! ஸ்ரீ சிவ ஞான சசிசேகரம் ஜகத்குரும் ஸ்ரீ சந்திரசேகரம்!
மஹாலக்ஷ்மி தனயம் அனுஷ அவதார ஸ்ரீ ஸ்வாமி நாத கருணா சாகரம்
ஸச்சிதானந்த சசிசேகர ஸ்ரீ சிவ ஞான சங்கர ஸ்வரூபம்
கைலாசபதிம் ஸதாஸ்ருதிச்ரவ ப்ரியம் ஜகத்குரும் சங்கரம்
சிவாவதார சங்கர ப்ரதீஷ்டித ஸுகுண வல்லபம் சுந்தர நயனம் சரணம்
ஸசிஷ்ய ஸேவ்ய சந்த்ர சேகரேந்த்ர தேசிகம் நித்யானந்த நிருபம சரிதம்
க்ருபா கடாக்ஷ வீக்ஷணைஸ் ஸமஸ்த்ததாபஹாரிணம் சாந்த வதனம்
ஞான சாகரம் க்ருபா சாகரம் மந்தஹாஸ அரவிந்த ஸங்காச வதனம்
ஸத்ய சம்ரட்சணம் ஸத்குரு அவதாரம் காஞ்சீம் ஜகத்குரும் ஸ்ரீ சந்திரசேகரம்
அஹம் மமேதி பாநஹீன மானஸம் க்ருபா நிதிம் ஞானாந்த சேகரம் ஸ்ரீ சந்திர சேகரம்
யமாதியோக ஸாத நாதி போதக குணோததிம் வேத நாத காருண்ய ரூப நாயகம்
ஸமஸ்த பீட முக்ய காமகோடி பீட பாஸ்வரம் மங்கள சத்ஸ்வரூப ஸ்ரீ சந்திர சேகரம்
ஸசிஷ்யஸேவ்ய சந்த்ரசேகரேந்த்ர தேசிக ஞான சசிசேகர ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரம்
ஸ்ரீ சந்த்ரசேகர யதீந்த்ர ஸரஸ்வதீனாம் சாந்தாந்தரங்க கலிதாகில பாவுகானாம் |
காஞ்சீ புரஸ்தித மஹோன்னத காமகோடீ பீடீமுபாஸ்ரீதவதாம் சரணாவுபாஸே
ஸ்ரீ ஜகத்குரும் நித்ய ஸ்மரணார்த்தம் ஸர்வ மங்களானி பவந்து.
ஸ்ரீமத் சந்த்ர சேகரேந்த்ர ஸரஸ்வதீ ஸத்குரவே நம:
ஓம் ஸ்ரீசந்த்ரசேகரேந்த்ராய வித்மஹே சார்வ பௌமாய தீமஹி |
தன்னோ ஜகத்குரு ப்ரசோதயாத் ||
அந்த மஹானின் பொன்னடிகள்தாம் பெயர் தெரியாத எத்தனை குக்க்ராமங்களில் பட்டு, பல காலம் தங்கி, அவற்றை புனித ஸ்தலங்களாக புகழ் பெற வைத்திருக்கின்றன.
ஸ்ரீமஹா பெரியவா சரணம்! ஸ்ரீமஹா பெரியவா சரணம்! ஸ்ரீமஹா பெரியவா சரணம்!
ஸ்ரீமஹாபெரியவா அபயம்! ஸ்ரீமஹா அபயம்! ஸ்ரீமஹா அபயம்!

தெய்வ சங்கல்பம்! - மஹாபெரியவா சங்கல்பம்

ஏகாதசியன்று பெரியவா நிர்ஜல உபவாசம். ஆனால் தொண்டு செய்யும் சிஷ்யர்களார் அவ்வளவு கட்டுப்பாடாக இருக்க முடியுமா? "கொலை பட்டினியாக" இல்லாமல், பலகாரம் சாப்பிடுவார்கள் [முழு பட்டினியாக ஓரிரு சிஷ்யர்கள் இருப்பார்கள்]
ஸ்ரீ மடத்தில் பலகாரம் என்றால், அரிசி உப்புமாதான் [இது ரொம்ப பிரசித்தம்] இட்லி, தோசை, அடை,பூரி என்று எதுவும் செய்வது கிடையாது.
ஒரு ஏகாதசி, சிஷ்யர்களுக்கு அடை சாப்பிட வேண்டும் என்று தீராத ஆசை. தேவையான சாமான்களை சேகரித்து, மாவு அரைத்து தயாராக வைத்து விட்டார்கள். பிற்பகல் ஒரு மணி, அடுப்படியில் சுமார் 50 அடைகளை வார்த்து வைத்து விட்டார். எல்லாருக்கும் பசி. நாக்கை சப்பு கொட்டிக்கொண்டு அடை பலகாரத்துக்கு உட்கார்ந்தார்கள்.
ஒருவர் இலையை எடுத்து போட்டுக்கொண்டிருந்தபோது, உத்தரவு வந்தது..."பெரியவா எல்லாரையும் வர சொல்றா"
அடுத்த நிமிஷம் அத்தனை பெரும் பெரியவா எதிரில். "விஷ்ணு சஹஸ்ரநாமம் எல்லோரும் ரெண்டு தடவை சொல்லுங்கோ" ஒரு வழியாக சஹஸ்ரநாம பாராயணத்தை முடித்து கொண்டு, அடை த்யானத்துடன், சமையல்கட்டுக்கு ஓடினார்கள்.
ஆனால் ......அந்தோ! பரிதாபம்!
ஒரு அடை கூட காணப்படவில்லை. "என்னடா ஆச்சு?"
"என்ன ஆச்சா? இன்னான் [பெயர் இல்லை] வந்து சாப்பிட்டானாம்! மீதியை ராத்ரிக்காக கட்டிண்டு போயிட்டானாம்!!!"
காட்டு இரைச்சல். ஆனால் என்ன செய்ய? அடை நடை பயணமாக எங்கேயோ போய்டுத்து
ஏகாதசியன்று நிஜமான உபவாசம் சிஷ்யர்களுக்கும்!
இன்னொருமுறை சின்ன கிராமத்தில் முகாம். ஏகாதசி. தோசை பலகாரத்துக்கு பக்காவாக ஏற்பாடு செய்திருந்தார்கள். மத்யான்னம், டூரிஸ்ட் பஸ்ஸில் பக்தர்கள் தரிசனத்துக்காக வந்தார்கள்.
பெரியவா, சமையல்கட்டில் சேவை செய்த வேதபுரியை கூப்பிட்டு, எல்லாருக்கும் பலகாரம் பண்ண சொன்னார். வேதபுரி வார்த்து வைத்திருந்த தோசைகளை போட்டு, பஸ் கும்பலை திருப்தி பண்ணி விட்டார். [தனியா உப்புமா செய்து போட வேண்டும் என்ற எண்ணமே அவருக்கு வரலியாம்!!]
பசியோடிருந்த பணியாளர்கள் காச்மூச்சென்று கத்தினார்கள். என்ன பலன்? தோசை வரப்போறதா என்ன? உஷ்ணத்தை தணிக்கவே எல்லாருக்கும் நிறைய மோர் கடைந்து குடுத்தார் வேதபுரி.........உப்பு போடாமல்!
ஏகாதசி உபவாசம், த்வாதசி பாரணை செய்தால் மகத்தான புண்ணியம்! சிஷ்யர்களுக்கும் அந்த புண்ணியம் கிடைத்தது!
தெய்வ சங்கல்பம்!

Monday, 28 September 2015

"பெரியவாளின் அற்புத லீலைகள்"

திருவாரூரில் வசித்து வந்தவர் செல்லம்மா பாட்டி . மகாபெரியவாளின் அத்யந்த பக்தை. சொந்த பந்தம் என்று சொல்லிக்கொள்ள பெரிதாக பாட்டிக்கு யாருமே இல்லை. தங்கையின் மகன் ஒருவன் பாட்டியின் வீட்டுக்குப் பக்கத்திலேயே வசித்து வந்தான்.
அப்போது திருவாரூக்கு மகா பெரியவா ஷேத்ராடனம் வருவதாக செய்தி வந்தது. நடமாடும் தெய்வம் வரப்போகிறார் என்றதும் ஊரே விழாக்கோலம் பூண்டது.
ஊரில் உள்ள பிரபல குடுப்பத்தினர்கள் மகா பெரியவாளின் பாதுகைகளுக்கு பாத பூஜை செய்ய பேராவல் கொண்டு ஸ்ரீமடத்து அதிகாரிகளிடம் தங்கள் பெயர்களைப் பதிந்து கொண்டனர்.
எல்லோருக்கும் இருக்கும் பாத பூஜை ஆசை செல்லம்மா பாட்டிக்கும் இருக்காதா, என்ன? ஆனால் பாத பூஜை செய்ய காணிக்கையாக 200 ரூபாயை செலுத்த வேண்டுமே! பொருளாதார வசதி இல்லாத பாட்டி என்ன செய்வாள்?
வீட்டு பூஜையறையில் இருக்கும் மகா பெரியவாளின் படத்தின் முன் நின்று , அவரிடம் கண்கள் கலங்க கோரிக்கை வைத்தார். அன்றைய த்ஜினம் மதிய வேளையில் அசதியாக இருக்கிறதே என்று பாயை விரித்துப் படுத்திருந்தார். அப்போது பாட்டிக்கு ஒரு கனவு வந்தது.
அந்த கனவில் காவி வேஷ்டி, காவி மேல் துண்டு அணிந்து கொண்டு ஒரு பெரியவர் செல்லம்மா பாட்டியிடம் வருகிறார்."என்ன உனக்கு ஒரு200 ரூபாய் தானே வேண்டும்? நான் தருகிறேன். கவலைப் படாதே, " என்று சொல்லிவிட்டு , அடுத்த கணமே பொசுக்கென்று மறைந்துவிட்டார்.
கனவு கலைந்து எழுந்த பாட்டி வீட்டு வாசலுக்கு வந்து அந்தப் பெரியவரை தேடினார். "சரி. நமக்கு எப்படியும் பணம்கிடைத்துவிடும் . பெரியவாளே அருளிவிட்டார்," என்று பெரியவாளின் திருவுருவத்தின் முன் போய் அமர்ந்து கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்தார் பாட்டி.
சுமார் பதினைந்து நிமிடம் கடந்திருக்கும் . தங்கையின் மகன், " பெரியம்மா உனக்கு மணியாடர் வந்திருக்கு, " என்று உறக்க குரல் கொடுத்தான்.
பாட்டிக்கு திகைப்பு. " மணி ஆடரா, எனக்கா, எனக்கு யார் அனுப்பி இருப்பா?"என்ற யோசனையுடன் பூஜையறையில் இருந்து வெளியே வந்தார். அங்கே தபால்காரர், "பாட்டி ...உனக்கு மணி ஆர்டர் வந்திருக்கு. இதுலே கையெழுத்து போடு", என்று நீட்டினார்.
கையெழுத்துப் போட்டுக் கொடுத்து, தபால்காரர் கொடுத்த பணத்தை எண்ணிப் பார்த்தார். சுளையாக 200 ரூபாய்! பாட்டிக்கு பேச்சு மூச்சே வரவில்லை. பெரியவாளை மனத்துக்குள் தியானத்தபடி கண்ணீர் விட்டு விசும்பினார். தன்னிடம் கொடுக்கப்பட்ட படிவத்தில் அனுப்பியவரது முகவரி இருக்குமே என்று ஆர்வத்துடன் புரட்டிப்பார்த்துத் தேடினார்.
ஆச்சரியம் பாருங்கள்! அனுப்பியவரது முகவரியே படிவத்தில் இல்லை. கண்கள் கலங்க அந்தத் தொகையை உடனே எடுத்துக் கொண்டு ஸ்ரீமடத்து அதிகாரிகளை சந்தித்து பாத பூஜைக்கான பணம் என்று கட்டி, அன்றைய தினமே பாதபூஜை செய்து மகாப்பெரியவாளின் அனுக்ரஹம் பெற்றாள் பாட்டி.
அந்தப் பரபிரம்மம் ஒரு புன்னகையுடன் செல்லம்மா பாட்டியை ஆசிர்வதித்து பிரசாதம் கொடுத்து அனுப்பியது. கொடுத்து அனுப்பிய தெய்வத்திற்க்குதெரியாதா, பாட்டிக்கு எப்படி பணம் வந்தது என்று!!!

ஸ்ரீசந்த்ரசேகரேந்த்ர தோடகாஷ்டகம்

விதிதாகம தத்வ விபுத்தமதே
ரசிதாகிலகர்ம விகதத்தகதே |
ஸததாபஜிதாகில தேவததே
பவ சந்திர சேகர மே சரணம் ||
நான்கு வேதங்கள் ஆறு வேதாந்தங்கள் அறுபத்து நான்கு கலைகள் போன்ற யாவற்றினும் உட்கருத்தை உன்னிப்பாக அறிந்திருப்பவரும், வேத விதியை அனுஸரித்துத் தாங்கள் செய்யவேண்டிய கடமைகள் யாவற்றையும் செய்து தெளிந்த நுண்ணறிவைப் பெற்றிருப்பவரும், பாகுபாடு அற்ற நிலையில் ஸகல தேவதா ஸ்வரூபங்களையும் ஒன்றாகவே மதித்து எப்பொழுதும் ஸேவித்து வருபவருமான சந்த்ரசேகர ஸத்குருவே தாங்கள் தான் எனக்கு அடைக்கலம்.
அடிதாகில மத்யமலோககுரோ
த்ருடிதாகில தோஷ குணாகரதே |
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவ சந்திர சேகர மே சரணம் ||
கால் நடையாகவே புண்ய பூமியான பாரதம் முழுமையும் சுற்றி வருபவரும் ஜதக் குருவாயுள்ளவரும் காமம் க்ரோதம் என்பது போன்ற எல்லா தோஷங்களையும் அறவே ஒழித்திருப்பவரும் அமானித்வம் அதமபித்வம் என்பது போன்ற எல்லா நற்குணங்களையும் பூரணமாகப் பெற்றிருப்பவரும் ஆன தங்களுடைய புனிதமான சரணங்களை என் மனதில் எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். தாங்கள் தான் எனக்கு அடைக்கலம்.
பவரோக விதூநஜ நாவநபோ
பவபூஜன பாவன மானஸ தே |
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவ சந்திர சேகர மே சரணம் ||
ஸம்ஸாரமெனப்படும் பெரிய வியாதியால் மிகவும் வாட்டமுற்றிருக்கும் ஜனங்களை நல்லுறையென்ற மருந்தைக் கொடுத்து காப்பாற்றி வருபவரும், பரமேஸ்வரனின் மூர்த்தி பேதமான சந்திர மௌளீஸ்வரரை இடையறாது பூஜிப்பதால் பிறரையும் பரிசுத்தம் ஆக்கவல்ல மனதைப் பெற்றிருப்பவருமான தங்களுடைய புனிதமான சரணங்களை என் மனதில் எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். தாங்கள் தான் எனக்கு அடைக்கலம்.
கலிதோஷ நிராகரணார்ஹமதே
கருணாவித ஸஜ்ஜன லோகததே |
குருமாம் பவதுக்க விஹீத ஹ்ருதம்
பவ சந்திர சேகர மே சரணம் ||
கலியினால் ஏற்படும் ஸகல விதமான தோஷங்களையும் விலக்கவல்ல கூர்மையான புத்தியையுடையவரும், ஸாது ஜனங்களுக்கு ஏற்படும் துன்பங்களை விலக்கி அவர்களை கருணையினாலேயே காப்பாற்றி வருபவருமான தங்கள் ஸம்ஸாரிகமான துக்கங்கள் என்னை தாக்காதபடி கருணை செய்ய வேண்டும். தாங்கள் தான் எனக்கு அடைக்கலம்.
பவபாபதவாநல கேத மிதா
பவதா ஜனதா ஸுகிதா பவிதா
சரணாகத ரக்ஷண தக்ஷகுரோ
பவ சந்திர சேகர மே சரணம் ||
ஸம்ஸாரத்தில் செய்யப்படும் கொடிய பாபமாகிய காட்டுத்தீயினால் மிகவும் தாபத்தையடைந்துள்ள ஜீவராசிகள் தங்களுடைய கருணை வெள்ளத்தினால் சாந்தியையடைய வேண்டும். அடைக்கலம் என்று தங்களை வந்தடைந்தவர்களை ரக்ஷிப்பதில் தாங்கள் கையாளும் முறையே மிகவும் ஆச்சரியமானது. ஸத்குருவான தாங்களே எனக்கு அடைக்கலம்.
வ்ருஷ புங்கவ கேதந நாமக தே
துலநாமய தாமிஹ கோநுஸுதீ |
சரணாகத வத்ஸல தத்வ நிதே
பவ சந்திர சேகர மே சரணம் ||
வ்ருஷபத்தைக் கொடியிற் கொண்ட பரமேஸ்வரருடைய புண்ய நாமங்களுள் ஒன்றான சந்த்ரசேகரர் என்ற பெயரையே கொண்டு விளங்கி வரும் தங்களுக்கு ஈடாக இப்பொழுது யாருமில்லை. இனியும் இருக்கக் கூடுமோ என்ற ஐயமே எனக்கு ஏற்படுகிறது. அடைக்கலம் என்று அடைந்தவர்களை அன்போடு நோக்கும் தத்வ ஞானியான தாங்களே எனக்கு அடைக்கலம்.
ஜகதாமவதே விஹிதாதரணா
கதிதோ வெசரத்தி மஹாமஹஸ: |
அஹிமாப் கரிவாத்ர பவாநிதமே
பவ சந்திர சேகர மே சரணம் ||
க்ஷீணமடைந்து வரும் உலகத்தைக் காத்தருளும் நோக்கத்தில் தோன்றியவரும் பெரியோர்கள் பலர் அவர்களுள் கதிரோன் போன்று சிறப்புற்று விளங்குபவர் தாங்கள் தான் என்ற முடிவு எனக்கு ஏற்பட்டுவிட்டது.
பகவத்குரு சங்கர ஏவ பவாந்:
அமிதாகில தத்குண ஜால விபோ
பவ தாபக மே ப்ரதிபாசி குரோ
பவ சந்திர சேகர மே சரணம் ||
பிறவியைப் போக்கவல்ல ஜகத்குருவான ஆதிசங்கரரின் அபிரிதமான அற்புதமான குண விசேஷங்களை தங்களிடம் அனுபவிக்கின்ற எனக்கு தாங்கள் ஆதிசங்கரராகவே தோற்றமளிக்கிறீர்கள். தாங்கள் தான் எனக்கு அடைக்கலம்.
ஸ்ரீமஹாபெரியவா காயத்ரி:
ஓம் காஞ்சி வாஸாய வித்மஹே
சாந்த ரூபாய தீமஹி |
தன்னோ சந்த்ரசேகரேந்த்ர ப்ரசோதயாத் ||